மூடு

வேளாண்மை – உழவர் நலத் துறை

கொள்கை விளக்கக் குறிப்பு 2023-2024

வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தலையாய கடமையாகும்.

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து உணவுதானியப் பயிர்கள் உட்பட நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், சமையலுக்குப் பயன்படும் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகள் போன்ற வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படும் மற்ற பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி ஏற்பட்டபோதும், உணவு நெருக்கடி ஏற்படாமல் சமாளிக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் வேளாண்மையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1960-1961ஆம் ஆண்டில் சுமார் 42.46 சதவீதமாக இருந்த வேளாண்மையின் பங்கு 2009-2010ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக, பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே வாடிநவாதாரமாக உள்ளது. மண்வள சீர்கேடு, குறைந்து வரும் நீர்வள ஆதாரங்கள், கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுக்குப் போதிய முதலீடு அளிக்காதது, போதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளாத நிலை மற்றும் இடுபொருட்களின் விலை ஏற்றம் ஆகிய காரணங்களால் வேளாண் தொழிலில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து, வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/ பகுதிவாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் இவ்வரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இணை வேளாண் இயக்குனர்

மின்னஞ்சல் : agritnv[at]gmail[dot]com,
மின்னஞ்சல் : agritnv[at]nic[dot]in
தொலைபேசி எண் : 0462-2572514

திருநெல்வேலி மாவட்டம் வேளாண்மைத் தொழிலை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் (ஜுன் – செப்டம்பர்) கார் மற்றும் பிசானம் ஆகிய இரு பருவங்களாக (நவம்பர்-பிப்ரவரி ) வட கிழக்கு பருவமழைக்காலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபட்ட பயர் சாகுபடி முறை உள்ளது. பிரதான பயிராக நெல்லும். அடுத்தபடியாக பயறுவகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. தாமிரபரணி ஆற்றுப் பாசனப் பகுதிகளான மானுர்ர். பாளையங்கோட்டை. தென்காசி. செங்கோட்டை . அம்பாசமுத்திரம். சேரன்மகாதேவி. சிவகிரி. நாங்குநேரி ஆகிய பகுதிகளில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த சாகுபடி பரப்பில் நன்செய் நெல்சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. மானாவாரி பகுதிகளில் நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகளிலும கூட நெற்பயர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி மற்றும் புன்செய் பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடி முறை மொத்த சாகுபடிமுறையில் குறைந்த அளவிலேயே உள்ளது.

இம்மாவட்டத்தில் மக்காசோளம், பயறு, நிலக்கடலை, எள், தென்னை, வாழை, மிளகாய் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள சில பகுதிகள் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண் வகையுடையதாக இருப்பதால் இப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண்வளம், மண்ணின் தன்மை தட்பவெப்பநிலை, பாசனவசதி ஆகிய காரணிகளும் ஒருபகுதியின் சாகுபடி முறையினை நிர்ணயிக்கின்றன. மானாவாரி சாகுபடி வடகிழக்கு பருவமழை பருவத்தி்ல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மானாவாரி சாகுபடியில் பயறு மற்றும் சிறுதானிய பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயிர் திட்டம்

திருநெல்வேலி மாவட்ட பயிர்சாகுபடி பரப்பு.
வ.எண் பயிர் இறவை / மானாவாரி பருவம் பரப்பு (ஹெக்டேர்)
1. நெல் இறவை ஜுன்- செப்டம்பர் 23000
நெல் இறவை அக்டோபர் – பிப்ரவரி 60000
2. சோளம் இறவை டிசம்பர் – ஜனவரி 1000
சோளம் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1600
சோளம் மானாவாரி ஏப்ரல் – ஜுன் 1500
கம்பு இறவை ஏப்ரல் – ஜுன் 1000
கம்பு மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1000
ராகி இறவை ஜுன் – அக்டோபர் 400
மக்காச்சோளம் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 10000
குறுதானியங்கள் மானாவாரி செப்டம்பர் – நவம்பர் 1000
3. பயறுவகைகள்
உளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு இறவை ஜுன் – ஜுலை 3000
உளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு மானாவாரி செப்டம்பர் – அக்டோபர் 30000
உளுந்து,பச்சைபயறு,தட்டைபயறு நெல்தரிசு மார்ச் – ஏப்ரல் 3000
4. எண்ணெய்வித்துபயிர்கள்
நிலக்கடலை இறவை டிசம்பர் – பிப்ரவரி 2000
நிலக்கடலை மானாவாரி செப்டம்பர் – நவம்பர்,ஏப்ரல் – ஜுன் 200
சூரியகாந்தி மானாவாரி நவம்பர் – ஜனவரி 100
எள் மானாவாரி நவம்பர் – பிப்ரவரி 1200
தென்னை 16000
5. பருத்தி மானாவாரி செப்டம்பர் – பிப்ரவரி 3500
பருத்தி இறவை செப்டம்பர் – பிப்ரவரி 1000
6. இதரபயறுகள்
கரும்பு இறவை ஜனவரி – டிசம்பர் 3000
மிளகாய் இறவை மார்ச் – ஜுலை 600

மாவட்ட அளவிலான தொழில்நுட்ப பிரிவு

தொழில்நுட்ப பிரிவு

  • வேளாண்மை இணை இயக்குநர்
  • வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்)
  • வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலதிட்டம்)
  • வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)
  • வேளாண்மை அலுவலர் (மத்தியதிட்டம்)
  • வேளாண்மை அலுவலர் (மாநிலதிட்டம்)
  • வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு, தகவல் & பயிற்சி)

பயிற்சிபிரிவு

  • வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்)
  • வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்)

ஆய்வகப்பிரிவு

  • வேளாண்மை அலுவலர் (மண் பரிசோதனை நிலையம்), வேளாண்மை அலுவலர் (பூச்சி மருந்து ஆய்வகம்)
  • வேளாண்மை அலுவலர் (உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்) , வேளாண்மை அலுவலர் (உயிர் உர உற்பத்தி மையம்)

மாவட்ட ஆட்சியரக வேளாண்மை பிரிவு

  • வேளாண்மை துணை இயக்குநர் (பிபிஎம் – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்)
  • வேளாண்மை அலுவலர் (பிபிஎம்)

அமைச்சுப்பணியாளர்கள்

  • ஆட்சி அலுவலர்
  • உதவி கணக்கு அலுவலர்
  • கண்காணிப்பாளர்
  • உதவியாளர்
  • இளநிலை உதவியாளர்
  • பதிவறை எழுத்தர்
  • வாகன ஓட்டுநர்
  • அலுவலக உதவியாளர்
  • காவலர்

வட்டாரம் அளவிலான தொழில்நுட்ப பிரிவு

தொழில்நுட்ப பிரிவு

  • வேளாண்மை உதவி இயக்குநர்
  • வேளாண்மை அலுவலர்
  • துணை வேளாண்மை அலுவலர் (உதவி வேளாண்மை விரிவாக்க மையம்)
  • உதவி விதை அலுவலர்
  • உதவி வேளாண்மை அலுவலர்

அமைச்சுப் பணியாளர்கள்

  • கிடங்கு மேலாளர்
  • உதவி கிடங்கு மேலாளர்
  • உதவியாளர்
  • இளநிலை உதவியாளர்
  • பதிவறை எழுத்தர்
  • வாகன ஓட்டுநர்
  • அலுவலக உதவியாளர்
  • காவலர்

மாவட்ட தொழில்நுட்ப அலுவலர்களின பணிகள்

  • வேளாண்மை இயக்குநரிடமிருந்து பெறப்படும் மத்திய, மாநில மற்றும் பகுதி – II அரசுத் திட்டங்களின் செயல் மற்றும் நிதி இலக்குகளை வட்டாரங்களுக்குப் பகிர்ந்தளித்தல்.
  • மத்திய, மாநில மற்றும் பகுதி -II கீழ் மானியத் திட்டங்களுக்கு பெறப்படும் நிதி ஒதுக்கீட்டினை வட்டாரங்களுக்குப் பகிர்ந்தளித்தல்
  • வட்டார அளவிலான அலுவலர்களுக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சி அளித்தல்.
  • வேளாண்மை உதவி இயக்குநர்களால் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை மேற்பார்வையிடல்.

வட்டார தொழில்நுட்ப அலுவலர்களின் பணிகள்

  • வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மத்திய, மாநில மற்றும் பகுதி – II ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டப்பணிகளை செயல்படுத்துதல்.
  • அனுசரணை ஆராய்ச்சித்திடல்கள், செயல் விளக்கத் திடல்கள் அமைத்து கூராய்வு செய்து அறிக்கை அளித்தல்.
  • வருவாய் மற்றும் புள்ளியியல்துறை அலுவலர்களுடன் இணைந்து பயிர்சாகுபடி பரப்பு ஒத்திசைவு செய்தல்.
  • விவசாயிகள் மற்றும் பண்ணைமகளிருக்கு தொழில்நுட்ப செய்திகள் பரவலாக்குதல் மற்றும் பயிற்சிஅளித்தல். .
  • வருவாய் மற்றும் புள்ளியியல் துறையினருடன் இணைந்து பொது பயிர் மதிப்பீட்டாய்வு, காப்பீட்டுத் திட்ட பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளுதல்.
  • விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நுண்ணுரங்கள், உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாண மருந்துகள், உயிர் பூச்சி கொல்லிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்தல்.
  • உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் தரத்தினை கண்காணித்தல்.
  • பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு திடல்கள் அமைத்து அதனடிப்படையில் பரிந்துரை வழங்குதல், அல்லது பூச்சி நோய் தாக்குதலின் தீவிரத்தை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பண்ணைகளும், ஆராய்ச்சி நிலையங்களும்

அரசு விதைப் பண்ணை – கரையிருப்பு

திருநெல்வேலி தாலுகா கரையிருப்பு கிராமத்தில் 1957 ஆம் ஆண்டு 83.59 ஏக்கர் பரப்பில் தரமான விதைகளை உற்பத்தி செய்யும் நோக்கோடு அரசுவிதைப் பண்ணை உருவாக்கப்பட்டது. இப்பண்ணையில் தற்பொழுது சுமார் 76 ஏக்கர் பரப்பில் நெல், பயறு, பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆதாரம் மற்றும் சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பண்ணை கோடகன் கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்படும் கரையிருப்பு கட்டளை குளம் மூலம் பாசனம் பெறுகிறது.

தென்னைநாற்றுப்பண்ணைமற்றும்தென்னைஒட்டுமையம்

1991 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை தென்காசியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடகரை என்னும் கிராமத்தில் 3.91 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

மாநிலதென்னைநாற்றுப்பண்ணை – செங்கோட்டை

செங்கோட்டையில் 1958 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 5 ஆம் நாள் செங்கோட்டையில் தென்னை நாற்றுப் பண்ணை 1.95 ஏக்கர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது.இப்பண்ணையில் தரமான நெட்டை மற்றும் நெட்டை X குட்டை இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

நெல்ஆராய்ச்சிநிலையம்- அம்பாசமுத்திரம்

1937ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சிநிலையம் துவங்கப்பட்டது. உள்ளுர் நெல் இரகங்களை தனிவழித் தேர்வு மற்றும் கலப்பினமுறை மூலம் திறன் உயர்த்துதல். உயர் விளைச்சல் தரும் புதுஇரகங்களை உருவாக்குதல். உரப் பயன்பாட்டுத்திறன் மற்றும் பூச்சி நோய் எதிர்ப்புத்திறன் குறித்த செயல் விளக்கத்திடல்கள் அமைத்து வயல் வெளி பிரச்சனைக்கு தீர்வுகாணல். இந்நிலையத்தில் 20ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடியும், நஞ்சை தரிசில் பயறு வகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையம் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு உகந்த பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தியுடைய உயர்விளைச்சல் இரகங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இவ்வாராய்ச்சி நிலையத்தில் விதை நேர்த்தி, உயர் விளைச்சல் இரகங்களுக்கு நடவு வயல் பராமரிப்பு, தற்பொழுது சாகுபடியிலுள்ள நெல் இரகங்களுக்கு உர பரிந்துரை, உயிர் உரங்கள் மூலம் மண் வள மேம்பாடு, பல்வேறு தட்ப வெப்ப நிலைகளில் பூச்சிநோய் தாக்குதல் முன்னறிவிப்பு மற்றும் பயிர்பாதுகாப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையத்தியிருந்து வெளியிடப்பட்ட அம்பை16, அம்பை18 மற்றும் அம்பை19 ஆகிய இரகங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பிரதான இரகங்களாக பயிரிடப்பட்டு வருகிறது.

வேளாண்மை விரிவாக்க மையங்கள்

சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிகொல்லி மருந்து விற்பனை செய்யக்கூடிய வேளாண்மை விரிவாக்க மையங்கள்
விபரம்

வேளாண்மை விரிவாக்க மையங்கள்
வ.எண் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையங்கள்
1. திருநெல்வேலி திருநெல்வேலி டவுண்
2. மானூா் மானூா்
மானூா் கங்கைகொண்டான்
மானூா் தேவர்குளம்
3. பாளையங்கோட்டை பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை முன்னீா்பள்ளம்
பாளையங்கோட்டை திருநெல்வேலி ஜங்சன்
பாளையங்கோட்டை சிவந்திபட்டி
4. நாங்குநேரி நாங்குநேரி
நாங்குநேரி மூலக்கரைப்பட்டி
நாங்குநேரி களக்காடு
நாங்குநேரி பத்மனேரி
நாங்குநேரி ஏா்வாடி
5. ராதாபுரம் ராதாபுரம்
ராதாபுரம் திசையன்விளை
ராதாபுரம் கஸ்தூரி ரெங்கபுரம்
ராதாபுரம் வள்ளியூர்
ராதாபுரம் பழவூர்
6. அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் வி.கே.புரம்
அம்பாசமுத்திரம் அயன்சிங்கம்பட்டி
அம்பாசமுத்திரம் பள்ளக்கால் பொதுக்குடி
7. சேரன்மகாதேவி முக்கூடல்
சேரன்மகாதேவி சேரன்மகாதேவி
சேரன்மகாதேவி வீரவநல்லூா்