மாவட்டம் பற்றி
நெல்லை என்றும் டின்னவேலி என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, இந்தியாவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாகும். திருநெல்வேலி மாநகராட்சி தமிழ்நாட்டில் 6-வது பெரிய மாநகராட்சி ஆகும். திருநெல்வேலி என்ற பெயரானாது, ”திரு-நெல்-வேலி” என்ற மூன்று தமிழ் வார்த்தைகளால் உருவாக்கப்பட்டு ”மேன்மையுடைய நெல்லுக்கு வேலி அமைத்த” ஊர் என்ற அர்த்தத்துடன் அழைக்கப்படுகிறது. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது, மேலும் கடந்த 12-11-2019 முதல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மேலும் வாசிக்க