பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்(தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்(தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 | தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம். 2013 அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத் துறை செயல்பாட்டு துறை ஆகவும். மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்டத்தில் இச்சட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டு அலுவலர்களாகவும் உள்ளனர். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 இன் படி, 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அலுவலகங்களிலும் உள்ளக குழு (IC) நிறுவப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நபர்களுக்கு கீழ் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் உள்ளூர் குழுவை (LC) அமைக்கும் மாவட்ட அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வட்டார, தாலுகா, நகராட்சிகளில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
26/02/2025 | 26/02/2026 | பார்க்க (224 KB) ICC Handbook (4 MB) பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு உறுப்பினர்கள் விவரம் (423 KB) புகார் மனுக்களை பெறுவதற்கு தாலுகா, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் கோட்டம் அளவில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் விவரம் (449 KB) |