பொபது மேல்வைப்பாறு வடிநில கோட்டம்
பொதுப்பணித்துறை நீர் ஆதார துறையில் மேல் வைப்பாறு வடிநில கோட்டம் இராஜபாளையம் அரசு ஆணை எண் : 46/PWD/படி நாள்: 19.01.1996 அன்று அமைக்கப்பட்டது.
இந்த கோட்டத்தின் கட்டுப்பாட்டில் கீழ்கண்ட நான்கு உபகோட்டங்கள் உள்ளன.
- மேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் இராஜபாளையம்.
- மேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் திருவில்லிபுத்தூர்.
- மேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் வத்திரயிருப்பு..
- மேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் சங்கரன்கோவில்..
மேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் சங்கரன்கோவில் சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு 01.04.1996 முதல் செயல்பட்டு வருகிறது.இந்த உபகோட்டத்தின் கீழ் நான்கு வடிநில பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.அவைகள் முறையை
- மேல் வைப்பாறு வடிநில பிரிவு சங்கரன்கோவில்
- மேல் வைப்பாறு வடிநில பிரிவு குருவிகுளம்
- மேல் வைப்பாறு வடிநில பிரிவு வாசுதேவநல்லூர்
- மேல் வைப்பாறு வடிநில பிரிவு சிவகிரி.
இந்த வடிநில உபகோட்டத்தில் 32 அணைக்கட்டுகளும் 77 கண்மாய்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட 77 கண்மாய்களில் தேவியாறு வடிநிலத்தில் 24 கண்மாய்களும் கலிங்கலாறு வடிநிலத்தில் 11 கண்மாய்களும் நிசபநதி வடிநிலத்தில் 41 கண்மாய்களும் வல்லம்பட்டி ஓடையில் 1 கண்மாயும் பராமரிக்கப்பட்டு வருகிறதுமேல் வைப்பாறு வடிநில உபகோட்டம் சங்கரன்கோவில் மூலம் சங்கரன்கோவில் சிவகிரி திருவேங்கடம் மற்றும் கடையநல்லூர் ஆகிய நான்கு தாலுக்காவிலுள்ள சுமார் 9373.39 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த வடிநில உபகோட்டத்திலுள்ள முக்கியமான நான்கு கண்மாய்களின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
1.இராசிங்கப்பேரி கண்மாய் :

இராசிங்கப்பேரி கண்மாயானது இராயகிரி கிராமம் சிவகிரி தாலுகா திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கண்மாய் வைப்பாறு வடிநில கோட்டத்திலுள்ள மிக முக்கியமான கண்மாய் ஆகும்.இராசிங்கப்பேரி கண்மாயின் தனித்துவ அடையாள எண் TNVP-03-T0246 ஆகும்.இக்கண்மாயானது அட்சரேகையில் 9.31488N மற்றும் தீர்க்கரேகையில் 77.38626E ல் அமைந்துள்ளது.இக்கண்மாயின் வரத்துக்கால்வாய் இராசிங்கப்பேரி ஆற்றிலிருந்து தொடங்கிறது.இவ்வரத்துக்கால்வாயின் மொத்தம் நீளம் 4550மீ ஆகும்.இக்கண்மாயிலிருந்து செல்லும் உபரி நீரானது தொட்டிச்சிமலையாற்றில் சென்று கலக்கிறது.
இந்த கண்மாயின் நீரியியல் விவரங்கள் கீழே
விளக்கம் | எண் |
---|---|
மொத்த ஆயக்கட்டு | 846.63 ஹெக்டேர் |
மடைகளின் எண்ணிக்கை | 2 |
கண்மாயின் கொள்ளவு | 3.53 |
கரையின் நீளம் | 2100 மீ |
முழூ நீர் மட்ட அளவு | 195.620 மீ |
உச்ச நீர் மட்ட அளவு | 196.370 மீ |
கரையின் மேல் மட்ட அளவு | 198.370 மீ |
நீரின் பரப்பு | 111.90 ஹெக்டேர் |
2.குலசேகரப்பேரி கண்மாய் :

குலசேகரப்பேரி கண்மாயானது திருமலாபுரம் கிராமம் சிவகிரி தாலுகா திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கண்மாய் வைப்பாறு வடிநில கோட்டத்திலுள்ள மிக முக்கியமான கண்மாய் ஆகும்.குலசேகரப்பேரி கண்மாயின் தனித்துவ அடையாள எண் TNVP-02-T0272 ஆகும்.இக்கண்மாயானது அட்சரேகையில் 9.26421N மற்றும் தீர்க்கரேகையில் 77.38225E ல் அமைந்துள்ளது.இக்கண்மாயின் வரத்துக்கால்வாய் தலையணைக்கட்டிலிருந்து தொடங்கிறது.இவ்வரத்துக்கால்வாயின் மொத்தம் நீளம் 1750மீ ஆகும்.இக்கண்மாயிலிருந்து செல்லும் உபரி நீரானது கூனியாற்றில் சென்று கலக்கிறது.
இந்த கண்மாயின் நீரியியல் விவரங்கள் கீழே
விளக்கம் | எண் |
---|---|
மொத்த ஆயக்கட்டு | 328.32 ஹெக்டேர் |
மடைகளின் எண்ணிக்கை | 3 |
கண்மாயின் கொள்ளவு | 2.37 |
கரையின் நீளம் | 4150 மீ |
முழூ நீர் மட்ட அளவு | 196.410 மீ |
உச்ச நீர்மட்ட அளவு | 196.710 மீ |
மேல் மட்ட அளவு | 198.210 மீ |
நீரின் பரப்பு | 133.23 ஹெக்டேர் |
3.வாசுதேவநல்லூர் பெரிய கண்மாய் :

வாசுதேவநல்லூர் பெரிய கண்மாயானது வாசுதேவநல்லூர் கிராமம் சிவகிரி தாலுகா திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கண்மாய் வைப்பாறு வடிநில கோட்டத்திலுள்ள மிக முக்கியமான கண்மாய் ஆகும். வாசுதேவநல்லூர் கண்மாயின் தனித்துவ அடையாள எண் TNVP-02-T0317 ஆகும் இக்கண்மாயானது அட்சரேகையில் 9.23362N மற்றும் தீர்க்கரேகையில் 77.38312E ல் அமைந்துள்ளது.இக்கண்மாயின் வரத்துக்கால்வாய் பொட்டக்குளம் அணைக்கட்டிலிருந்து தொடங்கும் கோட்டமலையாறு மூலம் பெறுகிறது.இவ்வரத்துக்கால்வாயின் மொத்தம் நீளம் 1150 மீ ஆகும்.இக்கண்மாயிலிருந்து செல்லும் உபரி நீரானது நிசபநதியில் சென்று கலக்கிறது.
இந்த கண்மாயின் நீரியியல் விவரங்கள் கீழே
விளக்கம் | எண் |
---|---|
மொத்த ஆயக்கட்டு | 346.36 ஹெக்டேர் |
மடைகளின் எண்ணிக்கை | 3 |
கண்மாயின் கொள்ளவு | 2.22 |
கரையின் நீளம் | 2545 மீ |
முழூ நீர்மட்ட அளவு | 197.635 மீ |
உச்ச நீர்மட்ட அளவு | 198.235 மீ |
கரையின் மேல் மட்ட அளவு | 200.235 மீ |
நீரின் பரப்பு | 84.19 ஹெக்டேர் |
4.பெரிய சடையனேரி கண்மாய் :

பெரியசடையனேரி கண்மாயானது வு.புதுக்குடி கிராமம் கடையநல்லூர் தாலுகா திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கண்மாய் வைப்பாறு வடிநில கோட்டத்திலுள்ள மிக முக்கியமான கண்மாய் ஆகும். பெரிய சடையனேரி கண்மாயின் தனித்துவ அடையாள எண் TNVP-02-T0317 ஆகும் இக்கண்மாயானது அட்சரேகையில் 9.18745N மற்றும் தீர்க்கரேகையில் 77.41174E ல் அமைந்துள்ளது. இக்கண்மாயின் வரத்துக்கால்வாய் வாலமலையாற்றிலிருந்து தொடங்குகிறது.இவ்வரத்துக்கால்வாயின் மொத்தம் நீளம் 2300 மீ ஆகும்.இக்கண்மாயிலிருந்து செல்லும் உபரி நீரானது சின்ன சடையனேரி கண்மாய்க்கு சென்று கலக்கிறது.
இந்த கண்மாயின் நீரியியல் விவரங்கள் கீழே
விளக்கம் | எண் |
---|---|
மொத்த ஆயக்கட்டு | 169.14 ஹெக்டேர் |
மடைகளின் எண்ணிக்கை | 3 |
கண்மாயின் கொள்ளவு | 0.84 |
கரையின் நீளம் | 2200 மீ |
முழூ நீர்மட்ட அளவு | 186.180 மீ |
உச்ச நீர் மட்ட அளவு | 186.790 மீ |
மேல் மட்ட அளவு | 187.990 மீ |
நீரின் பரப்பு | 125.40 ஹெக்டேர் |