நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி
வேணுவனமாக இருந்த பகுதியின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடோறும் பால் நிறைந்த குடங்களை முழுது கண்ட இராமக்கோன் என்னும் ஆயன் சென்று கொடுத்து வந்த நாளில் ஒருநாள் வேணுவன மத்தியில் வந்தபொழுது பாற்குடங்கள் கவிழ்ந்து பால் சிந்திப்போயிற்று. பால் சிந்தியதையும் அங்கு மூங்கில் முளை ஒன்று விளங்குவதையும், குடம் உடைந்து விடாமல் உருண்டு சென்றிருப்பதையும் கண்டு அதிசயித்தான். மனம் பதறிச் சென்றான் ஆயினும் தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு நடந்தபின் அம்மூங்கில் முளை காலை இடறுகிறது என்று கருதி அதனை கோடாரியால் வெட்டினான். அங்கே குருதி பெருக்கெடுத்து ஒடியது. அது கண்டு ஆயன் அச்சமுற்று அரசனிடம் விரைந்தான். அரசன் பரிவாரம் புடைசூழ வந்த இக்குருதி வடிவதைக் கண்டான். இந்நிகழ்ச்சி இறைவன் திருவருளென எண்ணி கண்களில் நீர்மல்க அரியும் பிரமனும் காணற்கரிய முக்கண்ணா மூங்கினூடே என் பவள மேனிப்பொலிவைக்க காட்டியிருள்க என வேண்டினான். அவ்வாறு வணங்கியவாறு குருதி பெருக்கெடுத்து வரும் அவ்விடத்தைக் கைகளால் தொடவும் குருதி நின்றது. ஆதியே நீதியாக என் முன் இத்திருவிளையாடல் காட்டினாய். உண்மை வடிவம் காட்டுக என்றதும் சிவபெருமான் இலிங்க வடிவம் மிகச்சிறியது நான் விழா நடத்துவதற்கு இசைவாக வானுய வளர்ந்து பேர் உருக்காட்ட வேண்டும் எனப்பணிந்தான். மதி சூடிய தலையில் ஆயனால் வெட்டுண்ட காயத்தோடு அரசன் வேண்டுகோளுக்கு இணங்க காட்சியருளவும், வேந்தன் மீண்டும் வணங்கி ஆருயிர் வருந்தா வண்ணம் இப்பூவுலகில் குறுக வேண்டும் எனக் கேட்க இறைவனும் குறுகிக் காட்சியளித்தான். பின்னர் முறைப்படி ஆவுடையாள் சாத்தத் திருவுளங்கொண்டு அதன்படி செய்ய நெல்லை நாதன் நிமிர்ந்து வளர்ந்து நின்றான். மீண்டும் ஒரு ஆவுடையாள் சாத்த மீண்டும் இலிங்கம் வளர்ந்தது. இது கண்ட வேந்தன் பீடத்தின் மேல்பீடமாக இருபத்தொரு பீடம் அமைத்தான். அப்பொழுதும் இலிங்கம் வளரவே இதற்கு மேலும் பீடம் அமைப்பது மறையல்ல. நாம் முன்னம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வளர்ந்தார். என்று இறைவனை நாடித்துதிக்க இறைவன் இடப வாகனத்தில் தோன்றி என்னைச் சோதிமயமாகக் கண்டதால் நீ முழுதுங்ககண்ட இராமன் என்று பெயர் பெற்று விளங்குவாய் என அருளித்தனக்குத் திருத்தளி அமைக்க ஆணையிட்டருளினான். திருமூல நாதருக்கும் வேயின் முளைத்த இலிங்கத்திற்கும் மற்றுமுள்ள மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைத்து ஆகம விதிப்படி விழாக்களும் அமைத்தான். இத்திருவிளையாடல் பங்குனித்திங்கள் செங்கோல் திருவிழாவின் 4ம் நாள் அன்று நடைபெற்று வருகின்றது.
முக்கிய திருவிழாக்கள்
- சித்திரை-வசந்த மகோற்சவம் (பதினாறு தினங்கள்)
- வைகாசி-விசாகத்திருவிழா (ஒருநாள்)
- ஆனி-பிரம்மோற்சவம் (ஆனிப்பெருந்தோ்த்திருவிழா)(10 தினங்கள்)
- ஆடி-பூரத்திருநாள் (பத்து தினங்கள்)
- ஆவணி-மூலத்திருநாள் (பதினொறு தினங்கள்)
- புரட்டாசி-நவராத்திரி விழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்)
- ஐப்பசி-திருக்கல்யாண உற்சவம் (15 தினங்கள்)
- கார்த்திகை-கார்த்திகை தீபம். சோமவாரத் திருவிழா (ஒருநாள்)
- மார்கழி-திருவாதிரை விழா (பத்து தினங்கள்)
- தை-பூசத் திருவிழா (பத்து தினங்கள்)
- மாசி-மகா சிவராத்திரி (ஒரு நாள்)
- பங்குனி-உத்திரத் திருநாள் (பத்து தினங்கள்)
முக்கிய திருவிழாக்கள்-ஆணித் தோ் திருவிழா கொண்டாட்டம் (10 நாட்கள்)
அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்,திருக்குறுங்குடி
பரம்பரை அறங்காவலரும் திருஜீயர் மடம் மடாதிபதியான ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஆளுகையின் கீழ் குறைவற நடந்து வருகிறது. ப்ரம்மாண்ட புராணத்திலிருந்தும், வராஹ புராணத்திலிருந்தும் சொன்னது. திருமங்கையாழ்வார் அரங்கனிடம் சரணடைந்து தனக்கு “வீடு” மோட்ஷம் அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். நம் பெருமாள் (அரங்கன்) நம் தெற்கு வீடாகிய திருக்குறுங்குடிக்கு “போ” என்று நியமித்தார். திருக்குறுங்குடி வந்து அவரும் திருப்பணி கைங்கர்யங்களை செய்து நம்பியை மனமுருகிப்பாடி தனக்கு “வீடு| அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். நம்பியும் ஆழ்வாருக்கு “வீடு” தந்து திருவடிகளில்” சேர்த்துக் கொண்டார்.
திருமங்கையாழ்வார் திருவரசு (சமாதி)இவ்வூர்களின் கழனியின் (வயல்கள்) மத்தியில் அர்ச்சை வடிவில், நித்தியல் திருவாராதனத்துடன் எழுந்தருளி இருக்கிறார். ஸ்ரீ பொய்யிலாத மணவாள மாமுனியின் அணைந்த வேலும், தொழுத,கையும் என்ற மங்களா சாஸனத்தின்படி (கைகூப்பி) எழுந்தருளி இருக்கிறார்.