மூடு

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

1.டாக்டா். தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

I.திட்டத்தின் நோக்கம்.

  • விதவை பெண்களுக்கு மறுவாழ்வு அளித்தல்.

II.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் I

  • ரூ.25,000 நிதியுதவி ( இதில் ரூ. 15,000 ரொக்கமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும் ) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் II

  • ரூ.50,000 நிதியுதவி ( இதில் ரூ. 30,000 ரொக்கமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – I.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – II.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான வரம்பு ஏதும் இல்லை.
  • மணப்பெண்ணிற்கு குறைந்த பட்ச வயது 20 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 40க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • விதவை என்பதற்கான சான்று
  • மறுமணம் புரிவதற்கான திருமண அழைப்பிதழ்
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.

5.விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

  • திருமணமான நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

2.ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையா் மகள் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதியுதவி இல்லாமையால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமண நிதியுதவி அளித்தல்.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – 1.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான ரூ.72,000 ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விதவைத் தாயின் ஒரு பெண்ணிற்கு மட்டுமே திருமண நிதியுதவி வழங்கப்படும்.
  • மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • விதவை என்பதற்கான சான்று
  • வருமானச் சான்று ரூ. 72,000-ற்கு மிகாமல்.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.
  • திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்). சிறப்பு நோ்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்

5.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

3.அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமண நிதியுதவி அளித்தல்.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

திட்டம் – 1.

  • கல்வித் தகுதிகள் ஏதும் இல்லை.

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று
  • குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
  • மணப்பெண்ணிற்கு திருமணத்தன்று குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

4. சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

திட்டம் – 1

  • ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று( சட்டமன்ற உறுப்பினா் அல்லது பாராளுமன்ற உறுப்பினா்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
  • தாய், தந்தை ஆகியோரின் இறப்புச் சான்று.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.

திட்டம் – 2.

  • தாய், தந்தை ஆகியோரின் இறப்புச் சான்று
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.
  • திருமணப் புகைப்படம்.
  • திருமண அழைப்பிதழ் (திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்). சிறப்பு நோ்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் மட்டும் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

4.டாக்டா். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • இன வேறுபாட்டை தடுப்பதற்காகவும், கலப்புத் திருமணத்திற்கு ஊக்குவிப்பது.

2.வழங்கப்படும் நிதியுதவி.

திட்டம் 1

  • ரூ.25,000 நிதியுதவி ( இதில் ரூ. 15,000 ரொக்கமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும் ) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம் 2

  • ரூ.50,000 நிதியுதவி ( இதில் ரூ. 30,000 ரொக்கமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 அன்று முதல் நடைபெறும் திருமணங்களுக்கு திருமாங்கல்யத்திற்கான 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

கீழ்க்கண்ட இருவகையான கலப்புத் திருமணங்கள் நிதியுதவி பெறத் தகுதியானவை

பிரிவு – 1.

  • திருமணத் தம்பதியரில் ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் திருமண நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு – 2.

  • திருமணத் தம்பதியரில் ஒருவா் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவா் பிற்படுத்தப்பட்ட ( அ ) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பின் திருமண நிதியுதவி வழங்கப்படும்.

திட்டம் – 1.

  • மணப்பெண் பத்தாம் வகுப்பு பள்ளியில் படித்து தோ்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
  • தனியார் தொலைதுாரக் கல்வியின் மூலம் படித்து இருப்பின் 10 வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திட்டம் – 2.

  • பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக் கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கிகரீக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைகழகங்களிலோ படித்து தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கிகரீக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது

  • குடும்ப ஆண்டு வருமான வரம்பு ஏதும் இல்லை.
  • திருமணத்தன்று மணப்பெண்ணிற்கு குறைந்த பட்ச வயது 18 நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

4. சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

  • திருமணப் பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்று
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் வயது சான்று.
  • மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் சாதிச் சான்று
  • பள்ளி மாற்றுச் சான்று நகல்
  • பட்டம் அல்லது பட்டயப்படிப்பு தோ்ச்சி சான்று நகல் – திட்டம் 2.

5.விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

  • திருமணமான நாளிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6.விண்ணப்பிக்கும் முறை.

  • அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

5.சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

திட்டத்தின் நோக்கம்

  • சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குவது.

2.வழங்கப்படும் உதவி

  • தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்.

3.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

  • ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண்கள் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற மகளிர், பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்.
  • தையல் தைக்க தெரிந்தவா் என்பதற்கான சான்று.
  • வயது வரம்பு 20 வயது நிரம்பியராகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

4.சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள்.

  • ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டவா், விதவை, மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான சான்று
  • வருமானச் சான்று ரூ.72,000 ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • தையல் தைக்க தெரிந்தவா் என்பதற்கான சான்று.
  • சாதிச்சான்று
  • விண்ணப்பதாரரின் புகைப்படம்.
  • ஆதார் எண் நகல்

6.முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

1.திட்டத்தின் நோக்கம்

  • பெண் சிசுக்கொலையை அறவே ஒழித்தல், ஆண் குழந்தை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையினை மாற்றுதல், பெண் குழந்தைகளின் கல்வியினை ஊக்குவிப்பது போன்ற பெண்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ”முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி டாக்டா். ஜெ. ஜெயலலிதா பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

2.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

  • 35 வயதிற்குள் பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
  • குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை அல்லது இரு பெண்குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்
  • ஆண் குழந்தை இருக்க கூடாது. பின்னாளில் ஆண் குழந்தை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது.
  • விண்ணப்பிக்கும் போது பெற்றோர் அல்லது அவா்களின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

திட்டம் – 1 ன்

  • கீழ் ஒரு பெண்குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திட்டம் – 2 ன்

  • கீழ் இரு பெண்குழந்தைகள் மட்டும் இருப்பின் இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம் ரூ.72,000 ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3.சமா்ப்பிக் வேண்டிய சான்றுகள்

  • பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று ( மாநகராட்சி வட்டாச்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம் )
  • பெற்றோரின் வயது சான்று.
  • குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று
  • வருமானச் சான்று ரூ.72,000 ற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று
  • இருப்பிடச்சான்று

4.விண்ணப்பிக்கும் முறை.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையம் மூலம் அனைத்து சான்றுகளுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் (ICDS), உலகளவில் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான சமூக அடிப்படையிலான அமைப்பாக கருதப்படுகிறது. இத்திட்டம்(ICDS), 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான நலத்திட்டமாக 1984 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்தல், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான பிற தேவைகளை பூர்த்தி செய்தல் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

இப்போது இந்த மாவட்டத்தில் 1261 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவை 2-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் முன் பருவ கல்வி கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. போஷன் (POSHAN) 2.0 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சேவைகளின் உள்ளடக்கம் மற்றும் விநியோகம் ஆகியவைகளை வலுப்படுத்துகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் நோக்கங்கள்

  • குழந்தையின் சரியான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்
  • ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல்
  • இறப்பு, நோயுற்ற தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பள்ளி இடைநிற்றல் நிகழ்வுகளைக் குறைத்தல்
  • குழந்தை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளுக்கு இடையே கொள்கை மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றினை ஒருங்கிணைப்பு செய்தல்
  • முறையான சமூகக் கல்வி மூலம் குழந்தையின் இயல்பான ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சித் தேவைகளைக் கவனிக்கும் தாயின் திறனை மேம்படுத்துதல்
  • நாட்டின் மனித மூலதன வளர்ச்சிக்கு பங்களித்தல்
  • நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல் , குறிப்பாக, பசி இல்லாத நிலையில் (SDG 2) மற்றும் தரமான கல்வி( SDG 4)
  • ஊட்டச்சத்து குறைபாட்டின் சவால்களை எதிர்கொள்ளுதல்
  • நிலையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு, நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல்.
  • முக்கிய உத்திகள் மூலம் ஊட்டச்சத்து தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
  • சேவைகளின் தொகுப்பு

    அங்கன்வாடி திட்ட பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பின்வரும் சேவைகளை வழங்குகிறது

  • இணை உணவு
  • முன்பருவ முறைசாரா கல்வி
  • ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி
  • நோய்த்தடுப்பு
  • சுகாதார பரிசோதனை
  • பரிந்துரை சேவைகள்
  • ஆறு சேவைகளில் மூன்று, நோய்த்தடுப்பு, சுகாதார பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வழங்கப்படுகின்றன.

    .

    அங்கன்வாடி பயனாளருக்கு ஒரு நாள் இணை உணவின் அளவு
    வயது வழங்கப்படும் உணவு
    6 மாதங்கள் முதல் 1 வயது குழந்தைகள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் சத்து மாவு நாள் ஒன்றுக்கு 125 கிராம்
    மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 60கிராம் வீதம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது
    1 முதல் 2 வயது குழந்தைகள் அனைத்து குழந்தைகளுக்கும் சத்து மாவு நாள் ஒன்றுக்கு 125 கிராம் மற்றும் வாரத்தின் மூன்று நாட்கள் முட்டை
    மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 60கிராம் வீதம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது
    2 முதல் 6 வயது குழந்தைகள் அனைத்து குழந்தைகளுக்கும் சத்து மாவு நாள் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் மற்றும் வெவ்வேறு விதமான மதிய உணவு வாரத்தின் மூன்று நாட்கள் முட்டை (திங்கள், புதன் மற்றும் வியாழன்), பச்சைப்பயறு / கொண்டைக் கடலை செவ்வாய் கிழமை வழங்கப்படுகிறது மற்றும் அவித்த உருளை கிழங்கு வெள்ளிக்கிழமை முன்பருவ கல்வி பயில வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி வரும் குழந்தைகளின் வீடுகளுக்கு உலர் உணவுப் பொருளான அரிசி மற்றும் பருப்பு ஞாயிற்று கிழமைகளில் வழங்கப்படுகிறது.
    மேலும், தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 30கிராம் வீதம் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது
    கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் நாளொன்றுக்கு 150 கிராம் வீதம் சத்து மாவு வழங்கப்படுகிறது
    சேவைகளின் விவரங்கள்(பயனாளிகள் வாரியாக)
    நாட்கள் உணவு விவரம்
    திங்கள் தக்காளி சாதம் மற்றும் அவித்த முட்டை
    செவ்வாய் கலவை சாதம் மற்றும் அவித்த கொண்டைக் கடலை/ பச்சைப்பயறு
    புதன் காய்கறி கலவை சாதம் மற்றும் அவித்த முட்டை
    வியாழன் எலுமிச்சை சாதம் மற்றும் அவித்த முட்டை
    வெள்ளி பருப்பு சாதம் மற்றும் அவித்த உருளைக்கிழங்கு
    சனி கலவை சாதம்
    ஞாயிறு வீடுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் (அரிசி மற்றும் பருப்பு)

    சேவைகளின் விவரங்கள்(பயனாளிகள் வாரியாக)
    வ.எண் வகைகள் வழங்கப்படும் சேவைகள்
    1 இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணை உணவு

    • நோய்த்தடுப்பு
    • ஆரோக்கியம் சோதனைகள்
    • பரிந்துரை சேவைகள்
    2 இரண்டு முதல் ஆறு வயது குழந்தைகள் இணை உணவு

    • நோய்த்தடுப்பு
    • ஆரோக்கியம் சோதனைகள்
    • பரிந்துரை சேவைகள்
    • முன்பருவ முறைசாரா கல்வி
    3 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு

    • நோய்த்தடுப்பு
    • ஆரோக்கியம் சோதனைகள்
    • பரிந்துரை சேவைகள்
    • ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான கல்வி
    4 14 முதல் 49 வயதுடைய பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான கல்வி

    இணை உணவு ஊட்டச்சத்து திட்டம்

    பயனாளிகளான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே, இணை உணவு பரிந்துரைக்கப்பட்ட உணவு தேவைப்படுவோருக்கும் மற்றும் தினசரி உட்கொள்ளும் அளவிற்கும் இடையில் பாலமாக இந்த இணை உணவானது செயல்படுகிறது.

    இணை உணவு ஊட்டச்சத்து திட்டத்தின் முக்கிய கூறுகள்:

    • 1.சத்துமாவு
    • 2.மதிய உணவு

    • திருநெல்வேலி மாவட்ட ஒ.கு.வ.தி பயனாளிகள் *டிசம்பர் 2023
      வ. எண் வட்டாரத்தின் பெயர் *இணை உணவு குழந்தைகள் *கர்ப்பிணிப் பெண்கள் *பாலூட்டும் தாய்மார்கள் *மதிய உணவு குழந்தைகள் *1-2 முட்டை குழந்தைகள்
      1. அம்பாசமுத்திரம் 3873 527 463 1895 1164
      2. சேரன்மகாதேவி 4078 661 557 2036 1292
      3. களக்காடு 3988 473 496 2263 786
      4. மானூர் 6107 776 577 3300 1660
      5. நாங்குநேரி 3809 435 476 2054 1071
      6. பாளையங்கோட்டை 6374 799 747 3415 1922
      7. பாப்பாக்குடி 2867 375 350 1650 821
      8. இராதாபுரம் 5757 721 694 3257 1609
      9. திருநெல்வேலி (பொது) 6896 912 851 2583 1954
      10. வள்ளியூர் 5785 851 807 2925 1614