மூடு

வட்டார வளமையம்

அனைவருக்கும் கல்வி இயக்ககம்

வட்டார வளமையம் – பாளையங்கோட்டை நகா்

மாற்றுத்திறனாளி குழந்தையின் சாதனைக் கதை

மனவளர்ச்சி குறைந்த மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆ.தஸ்பிகா (14 வயது) மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டாள். அவள் பெற்றோருடன் மேலப்பாளையத்தில் வசித்து வந்தாள். அவளுடைய பெற்றோர்கள் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார்கள். அவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி.

அவள் பாளை நகர வள மையத்திற்கு உட்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி குறிச்சி வளாகத்தில் இயங்கி வரும் ஆதார வளமையத்தில் சேர்க்கப்பட்டாள். ஆதார வள மையத்தில் பயிலும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் மற்றும் இயன்முறை மருத்துவரால் தினமும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சிறப்பாசிரியர் மற்றும் இயன்முறை மருத்துவரால் வழங்கப்படும் தொடர் பயிற்சிகளால் தஸ்பிகாவின் செயல்திறனில் சிறந்த முன்னேற்றம் காணப்படுகிறது. ஆதார வளமைய ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களின் ஆலோசனைப்படி வீட்டிலும் அவருடைய அம்மா பயிற்சி அளித்தார்கள்.

கண்டறிந்த நிலை (2015-16)

ஆதார வள மையத்தில் அவளை சேர்க்கும் போது அவளுடைய அம்மாவின் துணையின்றி அவளால் உட்கார முடியாது. தவழ்ந்து தான் நகருவாள். கீழ்கண்ட பயிற்சிகள் சிறப்பாசியர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டது.

  1. பாசி கோர்த்தல்.
  2. இணை கம்பிகளுக்கு இடையே நடை பயிற்சி,
  3. கைகளை முன், பின் அசைக்கும் மணிக்கட்டு பயிற்சி,
  4. வாக்கர் உதவியுடன் நடைபயிற்சி
  5. விரல்களை அசைக்க பிங்கர் கிரிப் பயிற்சி
  6. ஆங்கிள் எக்ஸ்ஸைசர் கொண்டு கால் தசைகள் வலுப்படுத்தும் பயிற்சி
  7. ஸ்ட்டிக் சைக்கிள் கொண்டு கால்களுக்கான பயிற்சி
  8. நேராக நிற்க உதவும் பாலன்ஸ் போர்டு பயிற்சி

தற்போதைய நிலை (2017-2018)

சிறப்பாசிரியர்களால் தொடர்ந்து வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி மற்றும் தனிக்கவனத்தால் தஸ்பிகா பேபி வாக்கர் உதவியுடன் தானாகவே நடக்கிறாள். இதனால் அவருக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. சிறப்பாசிரியர்களுக்கும் மற்றும் பிற பெற்றோர்களுக்கும் தஸ்பிகாவின் முன்னேற்றத்தால் மற்ற குழந்தைகளையும் இதைப்போல் முன்னேற்றிவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

தஸ்பிகா அம்மாவின கூற்று

எனது மகளுக்கு ஆதாரவள மையத்தில் உள்ள உபகரணங்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட தொடர் பயிற்சிகளால் அவளின் உடல் மற்றும் மனநலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இப்பயிற்சிக்கு வழிவகுத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.