மூடு

மாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்

மாவட்ட வணிக வளாகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை மாவட்ட வழங்கல் (ம) விற்பனை சங்கத்தின்கீழ் மாவட்ட அளவில் மாவட்ட வணிக வளாகம் மற்றும் மாவட்டத்தின் பிற 16 இடங்களில் கிராம வணிக வளாகங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் 3 மதி விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் (உள் மற்றும் வெளி மாவட்டங்களில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 146 சுய உதவிக் குழுக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அம்மா இருசக்கர வாகனம்

இத்திட்டம் உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் பணியிடங்கள் வங்கி மற்றும் சமுதாய அமைப்புப் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது திருநெல்வேலி மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 500 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3955 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் அதிகபட்ச மானியமாக வாகன விலையில் 50% அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.