மூடு

பொதுப்பணித்துறை தாமிரபரணி பாசன அமைப்பு

தாமிரபரணி பாசன அமைப்பு

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளவற்றாத ஜீவநதிகளில் தாமிரபரணி ஆறும் ஒன்றாகும்.தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்ற கிராமத்தில் கடலில் கலக்கிறது.இந்த ஆற்றின்நீளம் 128 கி.மீஆகும். (திருநெல்வேலிமாவட்டம் – 84 கி.மீ. தூத்துக்குடிமாவட்டம் – 44 கி.மீ)

பாசனஅமைப்பு

தாமிரபரணி ஆற்று பாசன அமைப்பில் மொத்தம் 8 அணைக்கட்டுகளும், 11 கால்வாய்களும்உள்ளன.

8 அணைக்கட்டுகள் ஆவன

 1. கோடைமேலழகியான்அணைக்கட்டு
 2. நதியுண்ணிஅணைக்கட்டு
 3. கன்னடியன்அணைக்கட்டு
 4. அரியநாயகிபுரம்அணைக்கட்டு
 5. பழவூர்அணைக்கட்டு
 6. சுத்தமல்லிஅணைக்கட்டு
 7. மருதூா்அணைக்கட்டு
 8. திருவைகுண்டம்அணைக்கட்டு

மேற்கண்ட அணைக்கட்டுகளில் முதல் 6 அணைக்கட்டுகள் திருநெல்வேலி மாவட்டத்திலும்,கடைசி 2 அணைக்கட்டுகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

11 கால்வாய்கள் ஆவன

 1. வடக்குகோடைமேலழகியான்கால்வாய்
 2. தெற்குகோடைமேலழகியான்கால்வாய்
 3. நதியுண்ணிகால்வாய்
 4. கன்னடியன்கால்வாய்
 5. கோடகன்கால்வாய்
 6. பாளையங்கால்வாய்
 7. திருநெல்வேலிகால்வாய்
 8. மருதூா்மேலக்கால்வாய்
 9. மருதூா்கீழக்கால்வாய்
 10. வடக்குபிரதானகால்வாய்
 11. தெற்குபிரதானகால்வாய்

மேற்கண்ட 11 கால்வாய்களில் முதல் 7 கால்வாய்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும் கடைசி 4 கால்வாய்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
இந்த பாசன அமைப்பில் உள்ள முறைப்படுத்தப்பட்ட குளங்கள் மொத்தம் 186 ஆகும்.அவற்றில் 133 குளங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 53 குளங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன. தாமிரபரணி பாசன அமைப்பு மூலம் பயன்பெறும் மொத்த ஆயக்கட்டு 86107 ஏக்கா் ஆகும்.(திருநெல்வேலிமாவட்டம் – 40000 ஏக்கா்).பாசனபயன்பாடு தவிர தாமிரபரணி ஆற்றின் நீரானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீருக்காக பல்வேறு கூட்டுக்குடிநீா்திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.கூட்டுக்குடிநீா் திட்டங்கள் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் இதர தனிப்பட்ட குடிநீா்திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இவை தவிர,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு உரிய அரசாணைகள் மூலம் வரையறுக்கப்பட்ட அளவிற்கு தாமிரபரணி ஆற்றின் தண்ணீா் வழங்கப்படுகிறது.

தாமிரபரணி பாசன அமைப்பின் சுருக்கவிபரம் பின்வருமாறு

தாமிரபரணி பாசன அமைப்பின் சுருக்கவிபரம்
மாவட்டம் அணைக்கட்டுகளின் எண்ணிக்கை கால்வாய்களின் எண்ணிக்கை குளங்களின் எண்ணிக்கை பாசனபரப்பு (ஏக்கரில்)
திருநெல்வேலி 6 7 133 40000.00
தூத்துக்குடி 2 4 53 46107.00
மொத்தம் 8 11 186 86107.00

பயிர்சாகுபடி அமைப்பு

பொதுவாக தாமிரபரணி பாசன அமைப்பில் பின்வரும் 3 பாசன சாகுபடி காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

பாசன சாகுபடி காலங்கள்
பாசனசாகுபடி முறை காலவரையறை
பிசான சாகுபடி அக்டோபா் முதல் மார்ச் வரை
முன்கார் சாகுபடி ஏப்ரல் முதல் மே வரை
கார் சாகுபடி ஜுன் முதல் செப்டம்பர் வரை

இவற்றில் பிசான சாகுபடிபாசனம்தான் 86107 ஏக்கர் பரப்பில் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயன் அளிக்கும் முறை ஆகும்.இதுதவிர,ஏப்ரல் மாத துவக்கத்தில் அணைகள் மற்றும் குளங்களில் உள்ள நீா்இருப்பு மற்றும் நீா்வரத்தை கருத்தில்கொண்டு உரியகாலங்களில் வரையறுக்கப்பட்ட பாசனபகுதிகளுக்கு தண்ணீா் வழங்கப்படும்.
தாமிரபரணி பாசன அமைப்பில் பிரதானமாக பயிர் செய்யப்படுவது நெற்பயிர்தான்.பிற்சேர்க்கையாக வாழைப்பயிரும் சாகுபடி செய்யப்படுகிறது.