மூடு

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்-இலஞ்சி

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்
விளக்கம் பெயர்
இறைவன் வள்ளி தேவசேனாசமேத அருள்மிகு இலஞ்சிக்குமாரர், இருவாலுக நாயகர்
இறைவி இருவாலுக ஈசர்க்கினியாள்
தீர்த்தம் சித்ராநதி
தலவிருட்சம் மகிழமரம்
ஆகமம் மகுடஆகமம்

புராணச்சிறப்பு

Ilanji Temple front view

திருவிலஞ்சி என்னும் இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்திதல் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக்கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி,தேசசேனா சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார் அத்துடன் பார்வதி – பரமேஸ்வரரின் திருமணங்கான யாவரும் இமயம் சென்ற போது பாரப்பழுவினால் வடதிசை தாழ,தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்டு தென்பகுதி வந்த குறுமுனியாகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘வெண்மணலான சிவலிங்கம்’ இத்திருக்கோயிலில் உள்ளது. இவர் அகத்திய முனிவருக்கு தகுந்த உபதேசம் அருளினார் குற்றால வைணவ தலத்தை சிவஸ்தலமாக மாற்றிய பெருமையுடையவர் அகத்தியர். இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்துப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால்.வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அதைச் சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணிந்தார்.இறைவனின் கட்டளைச்சிர மேற்கொண்டு தென் திசை புறப்பட்ட. அகத்தியர் பொதிகைமலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவத்திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.எனவே அவர் சித்ரா நதி தீர்த்திற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தேவநாகரியில் வெண்மணல்”இருவாலுகம்” என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச்சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது.வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார், முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல்.அங்கு சென்று அங்குள்ள திருமாலைக் குறுக்கி குற்றாலநாதராக்கு எனப் பணித்தார்,அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.

இலக்கியச்சிறப்பு

நீரும்,தாமரையும் நிறைந்த இடம் எனப் பொருள் கொண்ட இலஞசி என்னும் இத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் திரு இலஞசிகுமாரரை அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் பாடிப்பணிந்து வணங்கியுள்ளார்.

வரலாற்றுச்சிறப்பு

புராண காலத்திலேயே இத்திருத்தலத்தை கி.பி 14 ம்நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியன் புதுப்பித்துச் செப்பனிட்டுக் கட்டுவித்தான்.இத்திருக்கோயிலன் சுற்று மதில் சுவரை 15ம் நூற்றாண்டில சொக்கம்பட்டி ஜமீன்தாரரான காளத்திய பாண்டியன் கட்டுவித்துச் சிறப்புச் செய்துள்ளார்.

தனிச்சிறப்பு

temple front view

இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார்.அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால இங்கு திருமணம் செய்வது விசேஷம்.ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார்.இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர்,துர்வாசர்,காசிபர்,ஆகியோர் “உண்மையான பரம்பொருள் யார்?” என்று கேட்க “நானே பரம்பொருள்” என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வுரதன் என்றால் வரம் தரும் வள்ளல்வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனுடைய அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.அருணாகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும் ‘கருதாமறவா” எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரியில் ‘வரதா முருகா மயில் வாகனனே” என்று பாடுகிறார்.ஆகையினால் முருகனுக்கும் வரதராஜப் பெருமான் என்னும் பெயர்பொருந்தும்.

பூஜை நேரங்கள்

தினசரி திருவனந்தல,விளாபூஜை,காலசந்தி,உச்சிகாலம்,சாயரட்சை,அர்த்தசாமம் என ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை -6.30 நண்பகல்-12.00 பிற்பகல்-4.30 இரவு – 8.00

திருவிழா

சித்திரை பிரமோத்ஸவம்,வைகாசிவிசாகம்,நவராத்திரி,கந்தசஷ்டி, தனூர் பூஜை, தைபூசம், மாசிமகம் ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அன்னதானம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அன்னதான திட்டத்தின் கீழ் இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானம வழங்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து வசதி

  • இத்திருக்கோயில் தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5கி.மீ தொலைவிலும்,குற்றாலம்-செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
  • மதுரை,திருநெல்வேலி,தென்காசியிலிருந்து பேருந்து தொடர்வண்டி மற்றும் சிற்றுந்து வசதிகள் உள்ளன.

தங்குமிடம்

தென்காசி மற்றும் குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதிகள் பல உள்ளன.

தொடர்பு முகவரி

செயல்அலுவலர்
அருள்மிகுஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்
இலஞ்சி, தென்காசிவட்டம்.
திருநெல்வேலி -627805.
போன்-04633-283201
செயல்அலுவலர்-9443775147
E – Mail : thiruvilanjikumarar@gmail.com