மூடு

மணிமுத்தாறு அணை

வழிகாட்டுதல்

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி அருவிக்கு கீழே 80அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்ணை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.

புகைப்பட தொகுப்பு

  • மணிமுத்தாறு அருவியின் எழில்மிகு தோற்றம்
  • மணிமுத்தாறு நீர் வீழ்ச்சி
  • மணிமுத்தாறு நீர் வீழ்ச்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து 100 கி.மீ தொலைவு

புகைவண்டி வழியாக

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைகுறிச்சி ரயில் நிலையம்

சாலை வழியாக

திருநெல்வேலியிலிருந்து சாலை வழியாக கல்லிடைகுறிச்சி சென்று பின்னர் மணிமுத்தாறு அணைக்கட்டு செல்ல வேண்டும்