வன உயிரினம்
முண்டந்துறை புலிகள் சரணாலயம்
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.1988 இல் தேசிய புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் 817ச.கி.மீ.இல் ஏற்படுத்தப்பட்டது.புலிகள் சரணாலயம் சேரன்மகாதேவியிலிருந்து 20கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.அருகில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு சாலை வழியாக முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்ல்லாம்.ஏராளமான பேரூந்துகள் அம்பாசமுத்திரம் களக்காடு சாலை வழியாக இயக்கப்படுகின்றன.முண்டந்துறை புலிகள் சரணாலயம் வெளிப்பகுதியிலிருந்து 817ச.கி.மீ. மையப்பகுதியிலிருந்து 459ச.கீ.மீ. மற்றும் இடைப்பகுதியிலிருந்து 358ச.கி.மீ. பகுதியில் அமைந்துள்ளது.இந்த வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட 24 இயற்கை வழிகள் உள்ளன.இது மலையேற்றத்திற்கு ஒரு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது.அனைத்து தினங்களிலும் பார்வை நேரமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.சிறந்த பருவமாக செப்டம்பர் முதல் ஜனவரி வரையாகும்.முண்டந்துரை மற்றும் தலையணை வனப்பகுதியில் தங்குமிடங்கள் உள்ளன.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் பகுதி 1994 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.இப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இங்க தார்சாலையில் வசதியாக இணைக்கப்பட்டுள்ள கூந்தன்குளம் மற்றும் கடன்குளம் நீர்பாசன வசதிகள் காணப்படுகின்றன.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.தென்னிந்தியாவிலேயே பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான நீர் அதிக கொள்ளவை கொண்டுள்ளது.பறவைகள் சரணாலயத்தின் தேசியப்பெயராக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியிலிருந்து 38கி.மீ.தொலைவில் நாங்நேரி தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பறவைகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வருகை புரிகின்றது.இந்தகிராமத்தில் மக்கள் அரிதாகவே வசிக்கின்றனர்.டிசம்பர் இறுதியில் பறவைகள் புலம்பெயர்ந்து வருகின்றன.ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கின்றன.பின்னர் இந்த இளம் பறவைகள் பறந்து செல்லும் வயதை அடைந்து இங்கிருந்த புலம்பெயர்ந்த செல்கின்றன.
ஓவியங்கள் போன்று வரையப்பட்ட வண்ணமயமான பறவைகள் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வருகை புரிகின்றன. ஐந்து தலைமுறைகளாக இந்த பறவைகள் அதிர்ஷ்டவசமாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.இந்த பறவைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கள் சேகரித்து குனோ என்ற பறவைகளின் கழிவுகள் உரங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.இந்த பறவைகள் சுதந்திரமாக இங்கு சுற்றிதிரிகின்றன.இங்குள்ள பறவைகளுக்கு யாரேனும் தீங்கு இழைத்தால் அவர்களுக்கு மொட்டை அடித்து கழுதை மீது ஏற்றி தண்டனை கொடுக்கின்றனர்.
மாஞ்சோலை – மலைப்பகுதி
திருநெல்வேலியிருந்து 57கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.1062அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியியை சுற்றி ஏராளமான தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இப்பகுதியை சுற்றி காணப்படுகின்றன.பாம்பே பர்மா என்ற தேயிலைத்தோட்டம் மிகப்பிரபலமானதாக அறியப்படுகிறது.இங்கே 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.மலைகளின் அரசி என்று அழைக்கபடும் உதகமண்டலத்தை போன்று அருமையான சூழலை தருகிறது.