மூடு

தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளையோர்களுக்கு தனியார்துறையில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் வருமானத்தை உயர்த்திடும் நோக்கத்துடனும் கிராமபுறங்களில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு எந்த துறைகளில் பணிவாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிந்து கொள்ள செய்திடவும் பணியாளர்கள் தேவைப்படும் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை எளிதில் தெரிவு செய்யும் விதமாகவும் வேலைவாய்ப்பு முகாம்கள் தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளையோர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்திடும் முகமாக 530 இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு இதுவரை 295 எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 27 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் 4876 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது.

திட்டத்தின் காலம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2014-15 மற்றும்2015-16-ல் 100 நாட்கள் பணி முடித்த பயனாளிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்குதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 2014-15 மற்றும் 2015-16-ல் 100 நாட்கள் பணி முடித்த பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பpனர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பயிற்சி வழங்கி அவர்களுடைய வாழ்தாரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.இத்திட்டத்தின்கீழ் ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ஊதிய வேலைவாய்ப்பு பிரிவின்கீழ் 34 நபர்களுக்கும் சுய வேலைவாய்ப்பு பிரிவின்கீழ் 236 நபர்களுக்கும் பல்வேறு வகையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.