மூடு

கோதையாறு

பொதுப்பணித்துறை கோதையாறு இராதாபுரம் கால்வாய்

திருநெல்வெலி மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு 28/800 கி.மீ நீளம் கொண்ட இராதாபுரம் கால்வாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை கால்வாயின் நீட்டிப்பு கால்வாயாக வெட்டப்பட்டது.இராதாபுரம் கால்வாய் நிலப்பாறை கால்வாய் நெடுகை 2050 மீட்டரிலிருந்து ஆரம்பமாகி இராதாபுரத்தில் உள்ள மகேந்திரன்குளத்தில் முடிகின்றது.இராதாபுரம் கால்வாய் கற்காரையினால் கட்டப்பட்ட கால்வாய்.இதன் கொள்ளளவு 150 கனஅடி / வினாடிக்கு.இதன் முலம் 52 குளங்கள் பாசனம் பெருகின்றது. இராதாபுரம் கால்வாய் வாயிலாக 17000 ஏக்கர் நிலம் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெருகின்றது.இராதாபுரம் கால்வாயின் ஆரம்ப பகுதி தவிர மற்ற ஏனைய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Kothaiyar river top view

நீரியியல் விபரங்கள்

நீரியியல் விபரங்கள்
விளக்கம் எண்ணிக்கைகள்
இராதாபுரம் பிரதான கால்வாய் மொத்த நீளம் 28.800 கி.மீ
மொத்த ஆயக்கட்டு 17000 ஏக்கர்
நேரடி பாசனம் ஆயக்கட்டு 15980 ஏக்கர்
குளம் ஆயக்கட்டு 1012.15 ஏக்கர்
மொத்த குளங்கள் 52 எண்ணம்
மொத்த கிளைக் கால்வாய்கள் 32 எண்ணம்
கிளைக் கால்வாய் நீளம் 107.469 கி.மீ
கால்வாய் உள் அகலம் 3.50 மீ
கால்வாய் கொள்ளளவு 150 கனஅடி / வினாடி ( 12.96 மி.கனஅடி / நாள்)
சைபன்களின் எண்ணிக்கை 9 எண்ணம்
சுப்பர் பாசேச் 37 எண்ணம்

ஆலத்துறையாறு திசைதிருப்பு திட்டம்

திருநெல்வெலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் பணகுடி கிராமத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு முகப்பிலிருந்து ஆலத்துறையாறு உற்பத்தியாகின்றது.ஆலத்துறையாற்றின் குறுக்கெ அமைந்துள்ள கஞ்சிப்பாறை அணைகட்டு வாயிலாக ஆலத்துறையாறு திருப்பப்பட்டு மேல்மட்ட கால்வாய் மூலம் சூறாவளி அணைகட்டிற்கு நீர் சென்றடைகின்றது.கீழ்மட்ட கால்வாய் மூலம் அனுமாநதியில் நீர் சென்றடைகின்றது.அனுமாநதியின் குறுக்கெ அமைந்துள்ள 11 அணைகட்டுகள் மூலம் 47 குளங்கள் பாசனம் பெருகின்றது.