அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம்
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு கைலாசநாதர் |
இறைவி | அருள்தரும் சவுந்தரநாயகி |
தீர்த்தம் | தாமிரபுஷ்கரணி |
தலவிருட்சம் | வில்வம் |
ஆகமம் | காமிக ஆகமம் |
நடைதிறப்பு
காலை 7.30 மணி முதல் 10.00 மணிவரை
மாலை 5.00 மணி முதல் 7.30 மணிவரை
திருவிழாக்கள்
- மாதாந்திர பிரதோஷம்
- மகாசிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)
- ஐப்பசி அன்னாபிஷேகம் (அக்டோபர் – நவம்பர்)
அமைவிடம்
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது.
போக்குவரத்துவசதி
- தூத்துக்குடி,திருச்செந்தூர் மற்றும் ஆத்தூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது
- அருகில் உள்ள ரயில் நிலையம்- திருச்செந்தூர், தூத்துக்குடி
- அருகில் உள்ள விமான நிலையம்- தூத்துக்குடி
தங்கும்வசதி
திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் தங்கும் விடுதிகள் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது தஞ்சாவூர் அருகில் உள்ள கஞ்சனூர் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
சேர்ந்தபூமங்கலம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் – 628 151.