அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தென்திருப்பேரை
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு கைலாசநாதர் |
இறைவி | அருள்தரும் அழகிய பொன்னம்மை |
தீர்த்தம் | விருட்சதீர்த்தம் |
தலவிருட்சம் | மகா வில்வம் |
ஆகமம் | காமிக ஆகமம் |
நடைதிறப்பு நேரம்
- காலை 7.00 மணிமுதல் 10.00 மணிவரை
- மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை
திருவிழாக்கள்
- மாதாந்திர பிரதோஷம்
- மகாசிவராத்திரி (பிப்ரவரி – மார்ச்)
- தமிழ் வருடப்பிறப்பு (ஏப்ரல்)
- ஆடி பூரம் (ஜீலை – ஆகஸ்ட்)
- ஐப்பசி அன்னாபிஷேகம் (அக்டோபர் – நவம்பர்)
- கார்த்திகை தீபம் (நவம்பர் – டிசம்பர்)
- மார்கழி திருவாதிரை (டிசம்பர் – ஜனவரி)
அமைவிடம்
திருநெல்வேலி – திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
போக்குவரத்து வசதி
- திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
- அருகில் உள்ள ரயில் நிலையம் – ஆழ்வார்திருநகரி
- அருகில் உள்ள விமான நிலையம் – தூத்துக்குடி
தங்கும்வசதி
திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள நகரான திருச்செந்தூரில் தங்கும் விடுதிகள் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள திருவெண்காடு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
பொன்னம்மை சமேத கைலாசநாதர் திருக்கோயில்,
தென்திருப்பேரை, திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி – 628 621