அணைக்கட்டுகள்
அடவிநயினார் அணை
அடவிநயினார் அணைக்கட்டு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் அச்சன்கோவில் பகுதிக்கு அருகில் அடவிநயினார் அணைகட்டு அமைந்துள்ளது.பருவகாலங்களில் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இந்த அணைக்கட்டு பகுதிக்கு வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் சிறிய அருவி ஒன்று உள்ளது.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
கடனாநதி அணை
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதி சிவசைலம் கிராமத்தில் ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களின் ஒன்று.தற்போது இந்த அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.குற்றாலம் பருவகாலங்களிலும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவிக்கும் காலத்திலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
மணிமுத்தாறு அணை
திருநெல்வேலிக்கு மேற்கே சுமார் 47கி.மீ. தொலைவில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது.அணையின் மொத்த நீளம் அரை மைல்.மலையின் மூன்று பக்கங்களையும் சுற்றி தண்ணீர் உள்ளது.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
ராமநதி அணை மற்றும் பூங்கா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலூகா கடையத்தில் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ராமநதி அணைக்கட்டு. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இதற்கடுத்த அமைந்துள்ள பூங்காவிற்கும் அணைக்கட்டை பார்வையிடுவதற்கும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர்.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
குண்டாறு அணை
திருநெல்வேலியிலிருந்து 70கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்து.திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களின் ஒன்று.குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் அருமையான காலநிலை நிலவுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 1கி.மீ. தொலைவில் இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது.இங்கு அழகான அருவி ஒன்று அமைந்துள்ளது.இந்த அருவிக்கு செல்ல நான்கு சக்கர வாகனம் ஏற்றது.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.