வாழ்வாதார வழிகாட்டி மையம்
தமிழ்நாட்டில் ஒரு புதிய முயற்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் “வாழ்வாதார வழிகாட்டி மையம்” (Livelihood Facilitation Centre) அமைக்கப்பட்டு புதியதாக செயல்பட துவங்கியுள்ளது.
பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், பெண்கள், திருநங்கையர், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புதிய தொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த எளிதாக உதவிடவும், 12 அரசு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகள், கடன் திட்டங்களை ஒரே இடத்தில் வழங்கி தொழில் முனைவோரை உருவாக்கிடும் ஒருங்கிணைப்பு முகமையாக இம் மையம் செயல்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். இம்மையத்திற்கு வருவோர், மேற்கண்ட துறைகளின் திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு, தங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் இந்த மையத்திலேயே அளிக்கலாம். மேலும் பல் வேறு அரசு சலுகைகள், மானியங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்து முழுமையான வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயார் செய்தல், வங்கிகளிடம் கடன் உதவி பெறுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் வழிகாட்டியாக அமையும் வகையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு இம் மையம் செயல்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு
வாழ்வாதார வழிகாட்டி மையம்
தரைத்தளம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி.
மின்னஞ்சல் : lfctirunelveli@gmail.com