மூடு

மின்னாளுமை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம்

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project)நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை

பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

மின்னாளுமை மாவட்ட திட்டம்

தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 12.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.