மூடு

மாவட்ட ஆட்சியா் சுருக்கக்குறிப்பு

திரு. வி. விஷ்ணு, இ.ஆ.ப

District Collector image

இந்திய ஆட்சிப் பணியின் 2012ம் வருடத்தை சார்ந்த திரு. வி. விஷ்ணு  அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி கோட்டத்தில் சார் ஆட்சியராக தனது இந்திய ஆட்சிப் பணியினையினை துவக்கினார். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அலுவலராகவும், சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநராகவும் பணியாற்றி, தமிழ்நாட்டில் வேலையில்லா இளைஞர்களை வேலைக்கு தகுதிவாய்ந்தவர்களாக மாற்றும் மிக முக்கியமான பணியினை மேற்கொண்டார்.

திரு. விஷ்ணு அவர்கள் திருச்சிராபள்ளி, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் அவர் துறைமுக மேலாண்மை சான்றிதழை பெல்ஜியம், ஏ.பி.ஈ.சியிடமிருந்தும், திட்ட மேலாண்மை சான்றிதழை அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தினடமிருந்தும் பெற்றிருக்கிறார். இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்கு முன்பாக அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஆயன் என்ற நிறுவனத்தில் இடர் ஆய்வாளராக பணியாற்றியிருக்கிறார் கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான பெருமைமிக்க  மற்றும் சவாலான பாரத பிரதமரின் ஊரக வளர்ச்சித்துறை விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதனை தொடர்ந்து இந்திய ஆட்சிப் பணி தேர்வில் அகில இந்திய அளவில் 34-வது ரேங்கில் தேர்வாகினார். 2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஈசன்ஹோவர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நடுத்தர அலுவலர்களில் இவர் மட்டுமே இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் திருச்சிராபள்ளி, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் மாணவர் சாதனையாளர் விருதினையும் பெற்றிருக்கிறார்.