பொதுப்பணித்துறை சித்தாறு
இராமநதி நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மேலகடையம் கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையில் 5150’அடி உயரத்தில் இராமநதி ஆறு உற்பத்தியாகி 7 கீ.மீ தூரம் மலைப்பகுதி வழியாக பாய்ந்து பின்பு மலைஅடிவார சமவெளியில் வந்து சேருகின்றது. இவ்விடத்தில் ஆற்றின் குறுக்கே மண் அணை மற்றும் கல்லணையால் கூடிய இராமநதி நீா்த்தேக்கம் 1974-ம் ஆண்டு 839மீ நீளத்தில் 84 அடி உயரத்தில் 152 மி.கனஅடி கொள்ளளவில் 4943.51 ஏக்கா் நிலங்கள் பாசனமடையும் வகையில் வருடம் 2 தடவை நிரம்பக்கூடிய வகையில் 2 பாசனகால்வாய் மதகுகளுடனும் ஒரு கட்டுபாடுள்ள வழிந்தோடியுடனும், கட்டப்பட்டது. இந்நீா்த்தேக்கத்திற்கு கீழாக இராமநதி ஆற்றின் குறுக்கே உள்ள 9 அணைக்கட்டுகள் உள்ளன. இவ்வணைகட்டுகளின் வழியாக 33 குளங்கள் பாசனமடைந்து வருகின்றது.
நீரியல் விவரங்கள்
- நீா்பிடிப்பு உயரம் – 84’அடி
- அணையின் நீளம் – 839 மீட்டா்
- அணையின் கொள்ளளவு – 152 மில்லியன் கனஅடி
- நீர் பரவல் பகுதி – 0.38 Sq,Km
- நீா்வடியும் பரப்பு – 6.40 சதுர மைல்
- நீா்வழிந்தோடி கண்மாயின் அளவு – 2 No – 30’ x 15’ அடி
- நீா்வெளியேற்றும் திறன் – 10450 கனஅடி / வினாடி
- அணையின் உள்ள மதகுகள் – 2 எண்ணம், தென்கால் மதகு- 1 – ( 5’ x 6’ அடி ) , வடகால் மதகு 1 – ( 5’ x 6’ அடி )
- பாசனபரப்பு – 4943.51 ஏக்கா்
குண்டாறு நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், கண்ணுப்புள்ளி மெட்டு கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் சிற்றாற்றின் கிளை உபநதியாகிய குண்டாற்றின் குறுக்கே கல்லணை மற்றும் மண் அணையுடன் கூடிய குண்டாறு நீர்த்தேக்கம் 25.00 மிகஅடி கொள்ளளவில் அமைந்துள்ளது. அணையின் கீழ் பாயும் குண்டாறு ஆறானது 8 கிமீட்டர் தூரம் ஓடி கொட்டாக்குளம் கிராமத்தில் அரிகரா நதியில் கலக்கிறது.பின்பு அரிகரா நதியானது சுமார் 3 கி மீட்டா் தூரம் ஓடி தாமிரபரணியின் கிளை நதியான சிற்றாற்றில் கலக்கிறது
நீரியல் விவரங்கள்
- நீா்பிடிப்பு உயரம் – 36.10 மீட்டர்
- அணையின் நீளம் – 390.00 மீட்டா்
- மண்அணை – 240 மீட்டா்
- கல்லணை – 150 மீட்டா்
- அணையின் கொள்ளளவு – 25.00 மில்லியன் கனஅடி
- நீா்பிடிப்பு பரப்பு – 35.30 ஏக்கா்
- அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை – ஒன்று
- அணையின் வழிந்தோடியின் அமைப்பு – கட்டுப்பாடற்ற தானாக வழிந்தோடக்கூடியது
- அணையின் வழிந்தோடியின் நீளம் – 77 மீட்டர்
- அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு – 9347 கஅடி வி
- அணையில் உள்ள மதகுகள் – 2 எண்ணம்
- மொத்தஆயக்கட்டு – 681.02 Acres
கருப்பாநதி நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூா் வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள கருப்பாநதி நீா்த்தேக்கம் தாமிரபரணியாற்றில் கிளையாகிய சிற்றாற்றின் உபநதியான அனுமன்நதியில் விழும் கருப்பாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 5870அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. கருப்பாநதி ஆறு 20 கி.மீ தொலைவு மேற்கு நோக்கி சென்று ஊா்மேல்அழகியான் அணைக்கட்டின் கீழ் சாம்பவா்வடகரையில் அனுமன் நதியுடன் சோ்கிறது. அணையின் நீா்ப்பிடிப்பு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் பயன் பெறுகின்றது. கருப்பாநதி ஆற்றின் குறுக்கே ஆறு அணைக்கட்டுகள் உள்ளது. மற்றும்72 குளங்கள் உள்ளது
நீரியல் விவரங்கள்
- நீா்வடி பரப்பு – 11.33 சதுர மைல்கள்
- கூடுதல் வெள்ளத்தின் அளவு – 12,600 கனஅடி / வினாடி
- அணையின் மொத்த நீளம் – 890 மீட்டா்
- அணையின் கொள்ளளவு – 185 மில்லியன் கனஅடி
- அணையின் நீா்பிடிப்பு உயரம் – 72’அடி
- நீா்வழிந்தோடி கண்மாயின் அளவு- 2 No – 30’ x 15’ அடி
- அணையின் உள்ள மதகுகள் – 1 எண்ணம் , ஆற்று மதகு- 5’ – (0’ x 6’ – 0’
- மொத்தஆயக்கட்டு – 9514.20 Acres
கடனாநதி நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், தர்மபுரம் மடம் மற்றும் சிவசைலம் கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலை கீழ்புறமாக அதன் அடிபாகத்தில் தாமிரபரணி ஆற்றின் உபநதியான கடனாநதியின் குறுக்கே கல்லணை மற்றும் மண் அணையுடன் கூடிய கடனா நீர்த்தேக்கம் உள்ளது. நீர்த்தேக்கத்தின் கீழ் பாயும் கடனாநதி ஆற்றில் சிவசைலம் கிராமத்தின் அருகில் இலுப்பையாறு வந்து சேருகிறது. இவ்வாறாக இணைந்த ஆறு சுமார் 11 கி.மீ தூரம் தரைப்பகுதியில் பாயும் போது கீழஆம்பூா் கிராமத்தின் அருகில் இராமநதி வந்து சேருகிறது. அதன்பின்பு கடனாநதியானது தென்கிழக்காக சுமார் 13 கி.மீ ஓடி அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள திருப்புடைமருதூா் கிராமத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகள் உள்ளது.
நீரியல் விவரங்கள்
- மிகை கூடுதல் வெள்ளத்தின் அளவு – 17.94 ச.மைல் 46.46 ச.கி.மீ
- அதிகபட்ச நீர் வெளியேற்றம் – 26800 கனஅடி வினாடி
- அணையின் மொத்த நீளம் – 2645 மீ
- அணையின் கொள்ளளவு – 428.52 மில்லியன் கனஅடி
- அணையின் நீா்பிடிப்பு உயரம் – 85 அடி
- வழிந்தோடி கண்மாயின் அளவு – 7 எண்ணம் – – 25’ x 10’
- அணையில் உள்ள மதகுகள் – 4 எண்ணம் , ஆற்று மதகு -1-(1.52 மீ x 1.83 மீP- 2Nos),கால்வாய் மதகு – 3-(0.91 மீ x 0.91 மீP)
அடவிநயினார் கோவில் நீா்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் அனுமாநதியின் குறுக்கே அமைந்துள்ளது அடவிநயினார் கோவில் நீா்த்தேக்கம் 175 மிகஅடி கொள்ளளவில் அமைந்துள்ளது. அணையின் கீழ் பாயும் அனுமநதி 32கிமீட்டா் தூரம் ஓடி சிற்றாற்றில் கலக்கிறது.
நீரியல் விவரங்கள்
- நீா்பிடிப்பு உயரம் – 47.20 மீட்டர்
- அணையின் நீளம் – 670 மீட்டா்
- அணையின் கொள்ளளவு – 175.00 மில்லியன் கனஅடி
- நீா்பிடிப்பு பரப்பு – 15.54 சதுர கிமீ
- அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை – ஒன்று
- அணையின் வழிந்தோடியின் அமைப்பு – கட்டுப்பாடற்ற தானாக வழிந்தோடக்கூடியது
- அணையின் வழிந்தோடியின் நீளம் – 100 மீட்டர்
- அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு – 12600 கஅடி வி
- அணையில் உள்ள மதகுகள் – 2 எண்ணம்
- மொத்தஆயக்கட்டு – 7643.15 ஏக்கா்
கொடுமுடியாறு நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமத்தில் உள்ள களக்காடு வனப்பகுதியில் மேற்கு தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு பகுதி நோக்கி பாய்ந்து வரும் கொடுமுடியாறு மற்றும் கோம்பையாறு என்ற இரு காட்டோடைகள் (சந்திக்குமிடமான தாமரையார் என்று அழைக்கப்படும்) இடத்தில் ஆற்றின் குறுக்காக 2004-ம் ஆண்டு ரூ.3050.00 இலட்சம் மதிப்பீட்டில் 411மீ நீளம் மண் அணை மற்றும் கல்லணையுடன் கூடிய கொடுமுடியாறு நீா்த்தேக்கம் 28.00 மீட்டா் உயரத்தில் வருடத்திற்கு 2.11 தடவைகள் தண்ணீா் நிரம்பக்கூடிய அளவில் 126.53 மில்லியன் கனஅடி கொள்ளளவில் கட்டப்பட்டது. இந்நீா்த்தேக்கத்தின் மூலம் 44 குளங்கள் வாயிலாக 5781.00 ஏக்கா் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வணைக்கு அணையின் நீாபிடிப்பு பகுதியிலிருந்து வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை காலங்களில் நீா்வரத்து பெறப்படுகிறது. இவ்வணையில் தண்ணீா் முழுகொள்ளவில் நிரம்பியவுடன் தானாக நிரம்பி வழிந்தோடக்கூடிய கட்டுப்பாடற்ற வழந்தோடியும், கட்டுப்படுத்தப்படக்கூடிய வழிந்தேடியும் உள்ளது. இந்நீா்தேக்கதின் மூலம் நாங்குநேரி வட்டத்தில் 5 கிராமங்களும், இராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் ஆக மொத்தம் 16 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
நீரியல் விவரங்கள்
- அட்சரேகை – 80 26’ 00”
- தீா்க்கரேகை – 80 26’ 00”
- நீா்வடியும் பரப்பு – 24.86 ச.கி.மீ
- நீா்பிடிப்பு பரப்பு – 53.38 ஹெக்டோ் .
- கொள்ளளவு – 3.58 மி.கனமீட்டா் / 126.53 kp.f.mb
- வருடநீா் சேமிப்பு – 2.11 தடவை / 266 kp.f.mb
- மதகு எண்ணிக்கை / திறப்பின் நீளம் – 2 எண்ணம் 1.50 kP x 1.80 kP
- கட்டுபாடுள்ளது – 1 எண்ணம் 15.20 kP
- கட்டுபாடற்றது – 1 எண்ணம் 49.00 kP
- வழிந்தோடியின் வெளியேற்றும் திறன் – 17084 கனஅடி / வினாடிக்கு
நம்பியாறு நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், .இராதாபுரம் வட்டம், கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்காக அமைந்துள்ள 7 மற்றும் 8வது அணைக்கட்டுகளுக்கு இடையில் 2004-ம் ஆண்டு ரூ.1999.26 இலட்சம் மதிப்பீட்டில் 2605 மீ நீளம் மண் அணை மற்றும் கல்லணையுடன் கூடிய நம்பியாறு நீா்த்தேக்கம் 10.84 மீட்டா் உயரத்தில் 82.17 மில்லியன் கனஅடி கொள்ளளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நீா்தேக்கத்தில் உள்ள இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 40 குளங்கள் வாயிலாக 1744 ஏக்கா் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வணைக்கு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளிலிருந்து வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து பெறப்படுகிறது. இவ்வணையில் தண்ணீா் முழுக்கொள்ளவில் நிரம்பியவுடன் தானாக நிரம்பி வழிந்தோடக்கூடிய கட்டுப்பாடற்ற வழிந்தோடி உள்ளது. இந்நீா்த்தேக்கத்தின் மூலம் இராதாபுரம் வட்டத்திலுள்ள மொத்தம் 8 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
நீரியல் விவரங்கள்
- அட்சரேகை – 80 25’ 00”
- தீா்க்கரேகை – 770 49’ 05”
- நீா்வடியும் பரப்பு – 72.58 ச.கி.மீ
- நீா்பிடிப்பு பரப்பு – 376 ஏக்கா் .
- கொள்ளளவு – 2.33 மி.கனமீட்டா் / 82.17 kp.f.mb t
- வருடநீா் சேமிப்பு – 2.5 தடவை / 162 kp.f.mb
- மதகு எண்ணிக்கை / திறப்பின் அளவு – 2 எண்ணம்
- வலது பிரதான கால்வாய் – 1.50 kP x 1.80 kP
- இடது பிரதான கால்வாய் – 1.50 kP x 1.20 kP
- வழிந்தோடியின் வகை / நீளம் – கட்டுபாடற்றது / 240.00 மீ
- வழிந்தோடியின் வெளியேற்றும் திறன் – 45000 கனஅடி / வினாடிக்கு
வடக்குபச்சையாறு நீா்த்தேக்கம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பத்தை கிராமத்தில் உள்ள மேற்கு தொடா்ச்சி மலையின் அடிவாரத்தில் வடக்கு பச்சையாற்றின் குறுக்காக 2004-ம் ஆண்டு ரூ.4527.88 இலட்சம் மதிப்பீட்டில் 3110மீ நீளம் மண் அணை மற்றும் கல்லணையுடன் கூடிய வடக்குப்பச்சையாறு நீா்தேக்கம் 20.20 மீட்டா் உயரத்தில் வருடத்திற்கு 2 தடவைகள் தண்ணீா் நிரம்பக்கூடிய அளவில் 442 மில்லியன் கனஅடி கொள்ளளவில் கட்டப்பட்டது. இந்நீா்தேக்கத்தில் உள்ள ஓரே ஒரு மடையின் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டு அதன் மூலம் 115 குளங்கள் வாயிலகாக 9593 ஏக்கா் நிலங்கள் பயனடைந்து வருகின்றன.இவ்வணைக்கு அணையின் நீா்பிடிப்பு பகுதியிலிருந்து வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை காலங்களில் நீா்வரத்து பெறப்படுகிறது. மேலும் பருவ மழைகாலங்களில் பச்சையாற்றில் உள்ள திருப்பு அணைக்கட்டின் ஊட்டுக்கால்வாய் வழியாகவும் தண்ணீா் அணைக்கு பெறப்படுகின்றது. இவ்வணையின் தண்ணீர் முழுக்கொள்ளவில் நிரம்பியவுடன் தானாக நிரம்பி வழிந்தோடக்கூடிய கட்டுப்பாடற்ற வழிந்தோடி உள்ளது. இந்நீா்தேக்கத்தின் மூலம் மொத்தம் நான்குநேரி வட்டத்திலுள்ள 33 கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
நீரியல் விவரங்கள்
- அட்சரேகை – 80 32’ 30”
- தீா்க்கரேகை – 770 31’ 45”
- நீா்வடியும் பரப்பு – 35.09 ச.கி.மீ
- நீா்பிடிப்பு பரப்பு – 184.52 ஹெக்டோ் .
- கொள்ளளவு – 12.506 மி.கனமீட்டா் / 422 kp.f.mb
- வருடநீா் சேமிப்பு – 2 தடவை / 884 kp.f.mb
- மதகு எண்ணிக்கை / திறப்பின் அளவு – 2 எண்ணம் 1.20 kP x 1.80 kP
- வழிந்தோடியின் வகை / நீளம் – கட்டுபாடற்றது / 122.000 மீ
- வழந்தோடியின் வெளியேற்றும் திறன் – 17066கனஅடி / வினாடிக்கு