பிரபல நீர்வீழ்ச்சிகள்
அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
திருநெல்வேலியிலிருந்து 42கி.மீ தொலைவில் பாபநாசம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.பாபநாசம் நீர்வீழ்ச்சி அகஸ்தியர் நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.சிவன் பார்வதி தனது திருமண கோலத்தை அகஸதியருக்கு அருளியதால் இத்தலம் முக்கியமாக பாவங்களை நிவர்த்தி செய்யும் புனித தலமாகும்.இத்தலத்தில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம்.பாபநாசம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாபாவிநாசர் கோயில் அமைந்துள்ளது.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
திருநெல்வேலி ரயில் நிலைய சந்திப்பிலிருந்து முக்கிய நகரங்களுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
வருடத்தின் அனைத்து பருவகாலங்களில் நீர்விழும் இயற்கையான அருவியாகும்.இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்பவர்கள் இப்பகுதியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.இந்த அருவிக்கு மிக அருகில் 90அடி ஆழத்தில் மிக அருமையான குளம் ஒன்று உள்ளது.திருநெல்வேலியிலிருந்து 35கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இப்பகுதிக்கு தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி மற்றும் அருகில் உள்ள நகர பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த அருவி பகுதியானது.இந்த அருவிபகுதிக்கு அருகில் கோதையாறு அமைந்துள்ளது.
அடைவது எப்படி
திருநெல்வேலியிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உள்ளன.
திருநெல்வேலி ரயில் நிலைய சந்திப்பிலிருந்து முக்கிய நகரங்களுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.