மூடு

பள்ளிக் கல்வி துறை

கொள்கை விளக்கக் குறிப்பு 2023-2024

கல்வியானது, சமூகத்தில் குவிந்திருக்கும் அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு வழிமுறையாகும். கல்வியானது குழந்தைகளின் படைப்புத் திறனையும், அழகுணர்ச்சியையும் அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். கல்வி நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் அறிவை வளர்க்கிறது. மேலும் கல்வி, அனைத்து விவரங்களையும் பகுப்பாய்வு செய்து சரியான முறையில் புரிந்துகொள்ளும் ஆற்றலைக் குழந்தைகளுக்கு அளிக்கிறது.

தொலைநோக்கு தரமான கல்வியை எளிதாக, மகிழ்ச்சியான சூழ்நிலையில், தொடக்கநிலை மற்றும் இடைநிலைகளில் சுமையில்லாம்ல அனைத்துக் குழந்தைகளும் பெறுவதற்கு வழிவகுத்தல் மற்றும் குழந்தைகளின் நலனிற்காகப் பாதுகாப்புடன் கூடிய அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

குறிக்கோள்கள்

1. அனைவரும் எளிதாக அடையும் வண்ணம் சமமான, தரமான கல்வியை தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில் அளித்தல்.

2. மாணவர்கள் அனைத்து வகைகளிலும் முழுமையான வளர்ச்சி அடையப் பாடுபடுதல்.

3. அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பண்புகளுக்கேற்ப கலைத்திட்டத்தையும் மதிப்பீட்டு முறைகளையும் அமைத்தல்.

4. மாணவர்களின் அறிவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றை ஊக்குவித்து வளரச் செய்து, அவர்களது உடல் மற்றும் சிந்திக்கும் திறன்களை முழு அளவில் வெளிக் கொணரல்.

5. பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் பயன்பெறும் வண்ணம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்ததல்.

6. மகிழ்ச்சியான கற்றல் சூழ்நிலையைக் கற்றல் பயிற்சிகள், தானே அறிதல் மற்றும் ஆழ்ந்து ஆராய்தல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கி மாணவரை மையப்படுத்தி எளிய முறையில் கல்வியை வழங்குதல்.

7. தரமான கல்வியை இயன்றவரையில் மாணவர்களின் தாய்மொழியிலேயே வழங்குதல்.

8. மாணவர்கள் தங்களது எண்ணங்களை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு அளவற்ற வாய்ப்புகளை வழங்குதல்.

9. ஆண்டுத் தேர்வில் எளிய நெகிழ்வுத் தன்மையுடன், வகுப்பறையில் கற்றவற்றை உள்ளடக்கிய முறையில், ஒவ்வொரு பருவத்தின் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன், மாணவர்களிடையே எவ்வித கவலையோ, அச்சமோ, மன அழுத்தமோ ஏற்படுத்தாத வகையில் அமையச் செய்தல்.

10. மாணவர்கள் கற்றவற்றை வெளியுலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி அறியும் ஆற்றலை உருவாக்குதல்.

11. கற்றல் என்பது பாடங்களை மனம் மட்டுமே செய்யும் முறையில் இருந்து வேறுபடச் செய்தல்.

12. நாட்டின் குடியரசு அமைப்பின் கீழ் உள்ள சமூகப் பிரச்சனைகளைக் களைவதற்கு அடையாளம் காணும் ஆற்றலை மாணவர்களிடையே ஏற்படுத்துதல்.

பள்ளிக் கல்வித் துறையானது தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கும், மேலும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதற்கும் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மற்றும் பொது நூலகங்கள் இயக்ககம் ஆகியவற்றின் உதவியுடன் இயங்குகிறது. பள்ளிக் கல்வித் துறையானது இரு பெரும் கல்வித் திட்டங்களான அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) ஆகிய திட்டங்களின் துணையுடன் சீரிய முறையில் செயல்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஆகியவை முறையே ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கும், பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கும் பெருமளவில் உதவுகின்றன.

கல்வி
வகை இணைப்பு
அனைவருக்கும் கல்வி இயக்கம் சொடுக்குக
வட்டார வளமையம் சொடுக்குக