நிர்வாக அமைப்பு
மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலராக மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நீதிபதிசெயல்படுகிறார். வருவாய் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றவியல் நிர்வாகம், வாழ்வாதார மேம்பாடு போன்ற பல்வேறு முக்கியப் பணிகளுக்குப் முதன்மைப் பொறுப்பாளராகவும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் இவரே செயல்படுகிறார். தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் பல்வேறு பணிகளை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் கண்காணித்தும் ஒருங்கிணைத்தும் செயல்படுத்துவார்.
காவல் ஆணையர் தலைமையில் நகர காவல்துறை செயல்படுகிறது. காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தின் காவல் துறையின் தலைவராக உள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர்/ கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கீழ் வருவாய்த்துறையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அவர்களின் கீழ் ஊரக வளர்ச்சித் துறையும் செயல்படுகின்றன.
1. 8 வட்டங்கள், 30குறுவட்டங்கள், 370 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 2 வருவாய் கோட்டங்கள் உள்ளன.
ii மாவட்டத்திலுள்ள ஊரகஉள்ளாட்சிஅமைப்புகள்ஒன்றியத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் 9 ஊராட்சி ஒன்றியங்களாகவும், 204 கிராம ஊராட்சிகளாகவும் செயல்படுகின்றன. நகரப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 நகர பஞ்சாயத்துகள் எனவும் இம்மாவட்டத்தில் செயல்படுகின்றன.
iii காவல்துறையானது 7 காவல் கோட்டங்கள் மற்றும் 50 காவல் நிலையங்களுடன் 2 காவல் மாவட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
iv. அகஸ்தியர்மலை உயிர்க்காப்பகத்தின் கீழ் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள காடுகள் ஒரு கள இயக்குனரின் தலைமையில் இரண்டு துணை இயக்குநர்களின் கீழ் செயல்படுகிறது. திருநெல்வேலி வனப் பிரிவுக்கு மாவட்ட வன அலுவலர் தலைமையேற்று செயல்படுகிறார்.
மக்கள்தொகை விவரங்கள்:
இந்த மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு நிலவரப்படி(திட்டமிடப்பட்ட) மக்கள்தொகை 18,48,684 ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வட்டங்களில் திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரம். மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1024 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. மாவட்டத்தில் கல்வியறிவு சத விகிதம் 85.90% ஆகும்.
துறைகள் | இணைப்பு |
---|---|
வருவாய் நிா்வாகம் | சொடுக்குக |
வளா்ச்சித்துறை நிா்வாகம் | சொடுக்குக |
உள்ளாட்சி நிா்வாகம் | சொடுக்குக |
திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறை பணியாளர்கள் முதுநிலைப் பட்டியல் | சொடுக்குக |