மூடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்

திருநெல்வேலி

பொருளாதார பின்தங்கிய குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளை உருவாக்குவதே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளின் நோக்கமாகும்.

மேலும் குழந்தைகளின் கல்வி அறிவுவிகிதத்தை அதிகரிப்பதும் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், பள்ளிச்செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதும் இதன் பணியாகும்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளானது திருநெல்வேலி மாவட்டத்தில் 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று 2562 அங்கன் வாடி மையங்களில் 25 முதல் 60 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மதியஉணவு, முன்பருவகல்வி, கர்ப்பிணிதாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இணைஉணவு, வளர் இளம்பெண்களுக்கு இணைஉணவு, முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு மதியஉணவு வழங்குதல் என்று சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

 

இணை உணவுத் திட்டம்

திட்டங்கள்
வ.எண் திட்டம் வயது விபரம் பயன்கள்
1 கர்ப்பிணிபாலூட்டும்  தாய்மார்களுக்கான இணைஉணவு கர்ப்பிணிபாலூட்டும்  தாய்மார்கள் 220 கிராம்  ஒருநாள்
2 மதிய  உணவு 2 முதல் 5+ வயதுவரை திங்கள் – தக்காளிசாதம், முட்டை,செவ்வாய் – காய்கறிசலவைசாதம், பருப்பு, புதன் -புலவுசாதம், முட்டை,வியாழன் – எலுமிச்சைசாதம், முட்டை,வெள்ளி – பருப்புசாதம், உருளைகிழங்கு,சனி – காய்கறிகலவைசாதம்
3 முட்டை 12 முதல் 24 மாதங்கள் ஒவ்வொருபுதன்கிழமையும்
4 25 முதல் 60  மாதங்கள் ஒவ்வொரு திங்கள் புதன் மற்றும் வியாழன்
5 பாசிபருப்பு மற்றும் கடலைபருப்பு 24 முதல் 60 மாதங்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் 20 கிராம்பாசிபருப்பு அல்லது கடலைபருப்பு
6 பாசிபருப்பு மற்றும் கடலைபருப்பு 24 முதல் 60 மாதங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 20 கிராம்மற்றும் உருளைகிழங்கு
7 வளர் இளம் பெண்கள் 11 முதல் 18 வயதுவரை இரும்புச்சத்து மாத்திரை
8 உதவிதொகை பெறும் முதியோர் தினமும்மதியஉணவு
9 இணை உணவில் உள்ள மூலப்பொருட்கள் சதவீதம் தொகை
10 கோதுமை 42 சதவீதம் ரூ.63.90
11 சர்க்கரை, சோளம், கடலைபருப்பு, விட்டமின்கள், சுண்ணாம்பு, இரும்புசத்து 58 சதவீதம்

 

தினசரி குழந்தைகள் மற்றும் முதியோருக்கான மதியஉணவு
வ. எண் பொருட்கள் 25-60 மாத குழந்தைகள் உதவிதொகை பெறும் முதியோர்
1 அரிசி 80 கிராம் 200 கிராம்
2 பருப்பு 10 கிராம் 15 கிராம்
3 எண்ணெய் 2 கிராம் 1 கிராம்
4 உப்பு 1.9 கிராம் 1.9 கிராம்
5 காய்கறிகள் 0.94 பைசா (செவ்வாய், வெள்ளிமற்றும்சனி) 1.16 பைசா (திங்கள், புதன்மற்றும்வியாழன்)

 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் பயனாளிகளின் விபரம்

இணை உணவுபெறுபவர்களின் விபரங்கள்
வ. எண் வட்டாரம் இணை உணவுபெறும் குழந்தைகள் கர்ப்பிணித் தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்கள் மதிய உணவு 1-2 முட்டை முதியோர்
1. ஆலங்குளம் 6046 864 862 2240 1558 3
2. அம்பாசமுத்திரம் 5133 745 668 2064 1508 0
3. சேரன்மகாதேவி 5065 691 582 2145 1103 0
4. கடையம் 5379 708 584 2590 1240 3
5. கடையநல்லூர் 6078 841 760 1874 1068 0
6. களக்காடு 4325 635 528 1940 692 0
7. கீழப்பாவூர் 8291 1149 1011 3650 2156 0
8. குருவிகுளம் 4598 516 447 2025 829 0
9. மானூர் 6555 864 911 3000 1432 0
10. மேலநீலிதநல்லூர் 5060 571 506 2575 1195 0
11. நாங்குனேரி 4398 566 558 2039 569 0
12. பாளையங்கோட்டை 6472 790 649 2765 1774 0
13. பாப்பாக்குடி 4112 497 442 2015 945 0
14. இராதாபுரம் 6830 801 752 3145 1066 0
15. சங்கரன்கோவில் (ஊரகம்) 4743 486 511 2195 1151 0
16. சங்கரன்கோவில் (பொது) 4092 580 487 1265 945 0