அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் பாபநாசம்
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு பாபநாச சுவாமி |
இறைவி | அருள்தரும் உலகம்மை |
தலவிருட்சம் | கிளாமரம் |
தீர்த்தம் | தாமிரபரணி, வேத தீர்த்தம், பழைய பாபநாத தீர்த்தம் |
ஆகமம் | காமிக ஆகமம் |
பூஜை காலங்கள்
பூஜை | நேரம் |
---|---|
திருவனந்தல் | காலை 6.00 மணி |
சிறுகால சந்தி | காலை 7.30 மணி |
காலசந்தி | காலை 8.30 மணி |
உச்சிக் காலம் | காலை 11.00 மணி |
சாயரட்சை | மாலை 6.00 மணி |
அர்த்த சாமம் | இரவு 8.00 மணி |
திருவிழாக்கள்
- சித்திரை விசு
- மார்கழி உற்சவம்
- கந்த சஷ்டி திருவிழா
- சிவராத்திரி திருவிழா
அன்னதானம்
இத்திருக்கோயிலில் நாள்தோறும் 50 பக்தர்களுக்கு மிகாமல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அமல்படுத்தப்பட்ட அன்னதானத்திட்டம் 15.09.2011 முதல் சிறப்புற நடைபெற்று வருகிறது.
அமைவிடம்
இத்திருக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
போக்குவரத்து வசதி
- திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும், கல்லூர் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- மேலும் ரயில் வண்டிகளும் தென்காசி திருநெல்வேலி வழிதடத்தில் உள்ளன.
தனி சிறப்பு
இத்திருக்கோயிலை வழிபடுவது மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை அருகில் உள்ள சூரிய நயினார் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.
தொடர்பு முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில்,
பாபநாசம்,
அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி-04634-293757