மூடு

அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில் குன்னத்தூா்

அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில்
விளக்கம் பெயர்
இறைவன் அருள்மிகு கோதபரமேஸ்வரா் (எ) கைலாசநாதர்
இறைவி அருள்மிகு சிவகாமி அம்மன்
தல விருட்சம் வில்வம்
ஆகமம் காமிக ஆகமம்
Kunnathur temple front view

வரலாற்றுச்சிறப்பு

நவக்கிரகங்களில் ராகு பரிகாரத்திற்குரிய நவகைலாய தலமிது.குன்னத்தூா் என்கிற இவ்வுா் செங்காணி எனவும் அழைக்கப்படுகிறது.காணி என்றால் நிலம் செங்காணி என்றால் செம்மண் பொருந்திய நிலம் எனப்பொருள்படும்.முற்காலத்தில் குன்னத்தூர் கீ்ழ்வேம்பு நாட்டு செங்காணியான நவணிநாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கபட்டு வந்தது.இத்திருக்கோயில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கக்கூடும் என்பது இத்திருக்கோயில் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது.கோயில் புஜைகளை நடத்த வீரபாண்டிய மன்னன் 4,200 பணம் கொடுத்துள்ளதும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.இக்கோயிலில் நில அளவு கோல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.ஊரில் ஏற்படும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகளின் போது இந்த நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி,அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் செப்பேடு ஒன்றில் இத்திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இத்தலத்து இறைவன் திருநாகீசர் (இராகுத்தலமான திருநாகேசுவரம் போன்று) என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.

Gothaparameswar temple side view

தனிசிறப்பு

இத்திருக்கோயிலின் வெளிபிரகாரத்தில் ஒரே கல்லி்ல் வடிவமைக்கப்பட்ட திருவாச்சியுடன் கூடிய ஆறுமுகநயினார் சந்நிதி உள்ளது.மூலவர் லிங்கம் மார்பில் சர்ப்பம் போல் முத்திரை காணப்படும்.இத்தலமானது ராகுவின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் பரிகாரம் செய்ய வேண்டிய தலமாகும்.இது ராகு தலம் மற்றும் நவகயிலாயத்தில் நான்காவது தலம் ஆகும்.இத்தலம் திருமணத்தடை குழந்தை பாக்கியம்,காலதோஷம்,நாகதோஷம் ஆகியவற்றிற்கு பரிகாரத் தலமாகும்.

பூஜை நேரங்கள்

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பூஜைக்கள்.

காலை:

7.30 மணி முதல் 10.45 மணி வரை

மாலை:

5.00 மணி முதல் 6.30 மணி வரை

திருவிழாக்கள்

இராகு பெயர்ச்சி சிறப்பு புஜை, ஞாயிற்றுக்கிழமை இராகுகால புஜை.

Kunnathur temple side view

அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 11கீ.மீ தூரத்தில் நெல்லை நகர் – மேலத்திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது குன்னத்தூர் என்கிற கீழத்திருவேங்கடநாதபுரம் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி நகரத்திலிருந்து சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.திருநெல்வேலி சந்திப்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
அம்சம்:ராகு
ராசி:விருச்சிகம்,மேஷம்

சிறப்பு

இத்தலத்து இறைவனை வழிபடுதல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபடுதலுக்குச் சமமான ஒன்று.

நன்மைகள்

  • இந்த கோயிலின் கடவுளை பிரார்த்தித்து வந்தால் பின்வரும் சிக்கல்கள் திருத்தப்படுகின்றன.
  • வயிற்றுக்கோளாறு, மனநோய், மூலநோய் நீங்கும்.

தொடர்பு முகவரி:

செயல் அலுவலர்
அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில்
கீழத்திருவேங்கடநாதபுரம்
திருநெல்வேலி – 627 006
தொலைபேசி எண்: 9442018567